திருமண பந்தத்தில் இணைந்தனர் கெளதம் கார்த்திக் - மஞ்சிமா

By T. Saranya

28 Nov, 2022 | 03:19 PM
image

தமிழ் திரையுலகி ன் முன்னணி இளம் நட்சத்திர நடிகரான கௌதம் கார்த்தி க்கி ற்கும், அவரது மனம் கவர்ந்த நடிகை மஞ்சிமா மோகனுக்கும் சென்னையில் இன்று (28) சிறப்பாக திருமணம் நடைபெற்றது.

'நவரச நாயகன்' கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்தி க், மணிரத்னம் இயக்கிய 'கடல்' எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானா ர். தொடர்ந்து பல தரமான திரைப்படங்களில் நடித்து வந்த அவருக்கும், 'அச்சம் என்பது மடமையடா ' எனும் படத்தின் மூலம் நா யகி யாக அறி முகமான நடிகை மஞ்சி மா மோகனுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. 

'தே வரா ட்டம்' எனும் படத்தி ல் இருவரும் இணை ந்து நடிக்கும் போது நண்பர்களாக பழகி , பிறகு காதலர்களாக மாறினார்கள். இவர்களின் காதல் சிறிது காலம் ரகசியமாக இருந்தது.

பிறகு சமூக வலைதளத்தி ன் மூலம் இவர்களின் காதல் வெளியுலகுக்கு தெரிய வந்தது. இதன் பிறகு இரு வீட்டாரின் பெற்றோர்களின் சம்மதத்துடன், இவர்களின் திருமணம் உறுதியானது.

இந்நிலையில் இவர்களின் திருமணம் இன்று காலை சென்னையில் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் முன்னிலையி ல் எளிமையா க நடை பெற்றது. மணமக்களுக்கு தமிழ் திரையுலகிலிருந்து ஏராளமானவர்கள் நேரிலும், சமூகவலை தளங்கள் மூலமாகவும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right