தனியார் பஸ்கள் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டமையால் அரசாங்கத்துக்கு இரு நாட்களில்  மாத்திரம் 219 மில்லியன் ரூபா வருமானாமாக கிடைத்துள்ளது.  

இலங்கை  போக்குவரத்து சபை வரலாற்றில் இருநாட்களில் ஈட்டப்பட்ட அதிக் கூடிய வருமானம்  இதுவென இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

தனியார் பஸ்கள் வெள்ளிக்கிழமையன்று (2) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டமையால் 120 அரசாங்க பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன. இதன் மூலம் வெள்ளிக்கிழமை மாத்திரம் 120 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளது. இந்நிலையில் நேற்று 99 மில்லியன் ரூபா வருமானமாக கிடைக்கப்பெற்றுள்ளது.