பாப்பரசருடனான தொலைபேசி உரையாடலை இரகசியமாக பதிவுசெய்த கர்தினால்

By Sethu

28 Nov, 2022 | 12:26 PM
image

மோசடிக் குற்றச்சாட்டு வழக்கை எதிர்கொள்ளும் கர்தினால் ஒருவர், பாப்பரசர் முதலாம் பிரான்சிஸுடனான தனது தொலைபேசி உரையாடலை இரகசியமாக ஒலிப்பதிவு செய்த விடயம் வத்திகான் நீதிமன்றமொன்றில் வெளியாகியாது.

 ஆபிரிக்க நாடான மாலியில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட கன்னியாஸ்திரி ஒருவரை விடுவிப்பதற்காக நடந்த பணப் பரிமாற்றங்களுக்கு பாப்பரசர் அனுமதி வழங்கினாரா என அந்த உரையாடலில் பாப்பரசரிடம் கர்தினால் ஜொவானி ஏஞ்சலோ பேச்சியு கேட்கிறார்.

 கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது, இந்த ஒலிப்பதிவை செவிமடுப்பதற்கு ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. எனினும், இத்தாலிய பொலிஸாரிடமிருந்து பெறப்பட்ட ஒலிப்பதிவின் எழுத்து வடிவம் இத்தாலிய ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

மாலியில் அல் கயீதாவுடன் தொடர்புடைய ஆயுதக்குழுவொன்றினால் 2017 ஆம் ஆண்டு பணயக் கைதியாக்கப்பட்ட கொலம்;பிய கன்னியாஸ்திரி ஒருவர் 2021 ஒக்டோபரில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இக்கன்னியாஸ்திரியை விடுவிப்பதற்காக, கப்பப்பணமாக 5 லட்சம் யூரோ வழங்கப்பட்டதாகவும், இன்கர் மேன் எனும் பிரித்தானிய நிறுவனமொன்றுக்கு 3.5 லட்சம் யூரோ செலுத்தப்பட்தாகவும் கர்தினால் பேய்சியு தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில், லண்டனில் நட்டத்தை ஏற்படுத்தும் ஆடம்பரக் கட்டடமொன்றை வாங்கியமை, நிதித்துஷ்பிரயோகம் தொடர்பான சர்ச்சைகளுக்கு மத்தியில், 2020 செப்டெம்பரில், கர்தினால் ஏஞ்சலோ பேய்சியுவை பணிகளிலிருந்து பாப்பரசர் பிரான்சிஸ் நீக்கியதுடன், கர்தினாலுக்குரிய பல சிறப்புரிமைகளையும் நீக்கியிருந்தார்.

இந்நிலையில், நிதி மோசடி, பணச்சலவை மிரட்டிப் பணம் பறித்தமை முதலான குற்றச்சாட்டுகள் தொடர்பாக, கர்தினால் ஏஞ்சலோ பேய்சியு, அவரால் பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்ட  சிசிலியா மரோக்னா எனும் பெண், உட்பட 10 பேருக்கு எதிராக வத்திகான் நீதிமன்றில் கடந்த வருடம் ஜூலையில் வழக்கு விசாரணை ஆரம்பமாகியது.

வெளிநாடுகளில் சிறைபிடிக்கப்பட்டுள்ள மதகுருக்கள், கன்னியாஸ்திரிகளை விடுவிக்கச் செய்வதற்காக வத்திகானிடமிருந்து பெற்ற 5.75 லட்சம் யூரோ பணத்தை முறையற்ற விதமாக செலவிட்டதாக சிசிலியா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தம்மீதான குற்றச்சாட்டுகளை கர்தினால் பேய்ச்சி, சிசிலியா மரோக்னா இருவரும் நிராகரித்துள்ளனர்.

இந்நிலையில் 2021 ஜூலை 24 ஆம்  திகதி பாப்பரசருடன் தொலைபேசியில் உரையாடிய கர்தினால் பேய்சியு, 'கன்னியாஸ்திரியின் விடுதலைக்கான நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு நீங்கள் எனக்கு அனுமதி வழங்கினீர்களா, இல்லையா' எனக் கேட்டுள்ளார். 'கப்பப்பணமாக 500,000 யூரோவை நாம் வரையறை செய்துள்ளோம். அதற்கு மேல் வழங்கப்படக்கூடாது, அது பயங்கரவாதிகளிடம் சென்றுவிடும் என நாம் கூறினோம். இது குறித்து உங்களுக்கு நான் தெரிவித்தேன். இது உங்களுக்கு ஞாபகம் உள்ளதா' என பாப்பரசரிடம் கர்தினால் பேய்சியு கேட்டுள்ளார்.

அப்போது பதிலளித்த பாப்பரசர், இது தெளிவாக நினைவில்லை எனக் கூறியதுடன், தன்னிடம் கேட்க விரும்புவதை எழுத்து மூலம் கேட்குமாறும் கூறியுள்ளார்.

பாப்பரசர் குடல் சத்திரசிகிச்சையின் வைத்தியசாலையிலிருந்து வெளியேறி 10 நாட்களின் பின் இந்த உரையாடல் நடந்துள்ளது.

வத்திகான் சட்டங்களின்படி, வழக்கு ஒன்றில் சாட்சியாளராக பாப்பரசரை அழைப்பதற்கு முடியாது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெளிநாட்டிலுள்ள ரஷ்ய ஊடகவியலாளருக்கு 8 வருட...

2023-02-01 17:54:10
news-image

தன்னைப் போன்ற தோற்றம் கொண்ட  யுவதியை...

2023-02-01 17:06:10
news-image

ஈரானில் பகிரங்கமாக நடனமாடிய ஜோடிக்கு 10...

2023-02-01 14:58:34
news-image

அவுஸ்திரேலியாவில் காணாமல் போயிருந்த கதிரியக்க கொள்கலன்...

2023-02-01 14:55:18
news-image

பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் எதிர்நோக்கும்...

2023-02-01 12:41:27
news-image

உக்ரேனுக்கான இராணுவ உதவிகள் குறித்து சிந்திப்பதாக...

2023-02-01 12:16:48
news-image

மியன்மாரில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றி இன்றுடன்...

2023-02-01 11:56:05
news-image

சீனாவை கண்காணித்து அணு ஆயுதங்களை நவீனமயமாக்கும்...

2023-02-01 11:54:19
news-image

இந்தியாவின் ஜி20 தலைமைத்துவம் தீர்க்கமானது -...

2023-02-01 11:47:11
news-image

'பிபிசி தகவல் போர் நடத்துகிறது' -...

2023-02-01 11:15:02
news-image

உரியில் இடம்பெற்ற தாக்குதலுக்குப் பின் சிந்து...

2023-02-01 11:42:59
news-image

ஜார்கண்ட் மாநிலத்தில் குடியிருப்புக் கட்டடம் தீப்பற்றியதால்...

2023-02-01 11:13:29