கசினோ சட்டமூலத்துக்கு அரச நிதிக்குழு அனுமதி மறுப்பு : நிதிக்குழு தலைவர் ஹர்ஷ டி சில்வா அறிவிப்பு

Published By: Digital Desk 2

28 Nov, 2022 | 01:13 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,  இராஜதுரைஹஷான்)

இலங்கையில் முதல்தடவையாக கசினோவுக்கு அனுமதிப்பத்திரம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

என்றாலும் கசினோ ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை இல்லாமல் அரச நிதி குழுவினால் அதற்கு அனுமதி வழங்க முடியாது என எதிர்க்கட்சி உறுப்பினரும் அரச நிதிக்குழுவின் தலைவருமான ஹர்ஷடி சில்வா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழைம (நவ. 28) அரச நிதி குழுவின்  செயலாற்றுகை அறிக்கையை சபைக்கு சமர்ப்பித்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரச நிதிக்குழுவுக்கு வழங்கப்பட்டிருந்த கசினோ வியாபாரத்தை ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் மற்றும் கசினோ வியாபாரத்தை ஒகுங்குபடுத்தல் சட்டமூலத்தின் விதிமுறைகளுக்கு அரச நிதிக்குழுவினால் அனுமது வழங்கவில்லை.

ஏனெனில் இலங்கையில் முதல் தடவையாக கசினோவுக்கு அனுமதி பத்திரம் வழங்கவே இந்த சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்திருக்கின்றது.

ஆனால் உலகில் கசினோ அனுமதி பத்திரம் வழங்கும்போது அதற்கு கசினோ ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை ஒன்று இருக்கின்றது. ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் கீழே கசினோ நிறுவனங்கள் கண்காணிக்கப்படுகின்றன.

ஆனால் இலங்கையில் அவ்வாறானதொரு ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை இல்லை. அதனால் கசினோவுக்கு அனுமதி பத்திரம் வழங்கும் நடவடிக்கை மற்றும் கசினோ தொடர்பான அனைத்து அதிகாரமும் அமைச்சரு்க்கு கீழே வருகின்றது.

அரசாங்கத்துக்கு கசினோவை விரைவாக அனுமதித்துக்கொள்ள வேண்டிய தேவை இருக்கின்றது என்பது எமக்கு தெரியும். அதனால்தான் விரைவாக இந்த சட்டமூலத்தை சமர்ப்பித்திருக்கின்றது.

அதனால் கசினோ தொடர்பான கண்காணிக்கும் அதிகாரசபையை எந்த காலத்துக்குள் அமைப்பது என்ற கால எல்லையை எங்களுக்கு வழங்குமாறு நாங்கள் நிதி அமைச்சு அறிவித்திருக்கின்றோம்.

ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை ஒன்று இல்லாமல் கசினோவுக்கு அனுமதி வழங்குவது கடினமான விடயம். உலகில் எங்குவேண்டுமானாலும் கசினோ அனுமதி பத்திரம் வழங்கும்போது அங்கு கசினோ ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை இருக்கின்றது.

அதனால் கசினோ ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை அமைப்பது தொடர்பில் முறையான கால எல்லை ஒன்றை வழங்கும் போது கசினோ தொடர்பான சட்டமூலங்களை  எமக்கு அனுமதிக்க முடியும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் கடற்பகுதியில் போதைப்பொருளுடன் இரண்டு படகுகள்...

2026-01-25 11:06:23
news-image

8 கோடி ரூபா பெறுமதியான 'குஷ்'...

2026-01-25 10:46:39
news-image

தித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காணிகள்...

2026-01-25 10:27:25
news-image

மாகாணசபைத் தேர்தல் முறைமை குறித்து எதிரணியினருடன்...

2026-01-25 10:22:35
news-image

மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு அவசியமான...

2026-01-25 10:16:46
news-image

மனித புதைகுழி அகழ்வு விடயத்தில் விசேட...

2026-01-25 10:15:59
news-image

திருகோணமலையில் ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 20 ஆவது...

2026-01-25 10:12:08
news-image

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை...

2026-01-25 10:03:18
news-image

ஊழல்களை மறைப்பதற்காக கணக்காய்வாளர் நாயகத்தின் நியமனம்...

2026-01-25 09:58:46
news-image

கல்வி சீர்திருத்தங்கள் ஒத்தி வைக்கப்பட்டமைக்கு எதிர்க்கட்சி...

2026-01-25 09:53:40
news-image

கொழும்பு மாவட்ட அபிவிருத்திப் பணிகள் 97%...

2026-01-25 09:20:13
news-image

பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த கெசல்வத்தே...

2026-01-25 09:19:51