சமூக ஊடகங்கள் ஊடக நெறியாக்கத்திற்கமைய செயற்படுகிறதா ? - கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் அமைச்சர் பந்துல

By Digital Desk 2

28 Nov, 2022 | 12:40 PM
image

(இராஜதுரை ஹஷான், எம்ஆர்.எம்.வசீம்)

ஊடகங்கள் உயர் ஊடக கலாசாரத்தை பேணும் வகையில் செயற்படுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஊடகங்கள் மற்றும் ஊடக நிறுவனங்களின் சுதந்திரத்திற்கு எதிராக செயற்பட போவதில்லை. சமூக ஊடகங்கள் தற்போது ஊடக நெறியாக்கத்திற்கமைய செயற்படுகிறதா என்பது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை ( நவ . 28) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் வெளிநாட்டலுவல்கள், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான குழுநிலை விவாத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஊடகங்களின் சுதந்திரத்தையும்,உரிமைகளையும் மறுக்கவில்லை.ஊடகச் சுதந்திரத்திற்கு எதிராக செயற்படும் போது தோற்றம் பெறும் விளைவுகளுக்கு வரலாற்றில் பல சம்பவங்கள் சான்றாக உள்ளன.

பல்வேறு காரணிகளினால் நாட்டின் நற்பெயர் தொடர்பில் சர்வதேசத்தின் மத்தியில் தவறான சித்தரிப்புக்கள் காணப்படுகின்றன.

ஒருசில ஊடகங்கள் ஊடகவியலின் அடிப்படை நெறிமுறைகள் மற்றும் ஊடக ஒழுக்கவியலுக்கு எதிராக செயற்படுவதை மறுக்க முடியாது.

நாட்டின் முன்னேற்றத்தில் ஊடகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.ஆகவே ஊடகங்கள் தாய் நாட்டுக்காக பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.

சமூக ஊடகங்களை கண்காணிக்கும் வகையிலான சட்டத்தை இயற்ற அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.சமூக ஊடகங்கள் தற்போது ஊடக நெறியாக்கத்திற்கமைய செயற்படுகிறதா என்பது தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும்.

ஊடகங்கள் உயர் ஊடக கலாசாரத்தை பேணும் வகையில் செயற்படுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.ஊடகங்கள் மற்றும் ஊடக நிறுவனங்களின் சுதந்திரத்திற்கு எதிராக செயற்பட போவதில்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

3 ஆம் திகதி விசேட கட்சித்...

2023-02-01 22:39:37
news-image

பயங்கரவாதத்தடைச்சட்டத்தை இல்லாதொழிக்கவும் - அமெரிக்கா, பிரிட்டன்,...

2023-02-01 22:38:54
news-image

பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் பரிந்துரைகளும் சுயதீர்மானங்களும்...

2023-02-01 22:58:31
news-image

அரச சேவையாளர்களின் கொடுப்பனவை மட்டுப்படுத்துவதை தவிர...

2023-02-01 18:44:00
news-image

உள்ளூராட்சிமன்ற சபைத் தேர்தல் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தாது...

2023-02-01 22:59:39
news-image

தேசிய மனித உரிமைகள் செயற்திட்டம் இலங்கை...

2023-02-01 18:46:53
news-image

பாராளுமன்ற குழுக்களின் தலைமைத்துவ பதவியை ஆளும்...

2023-02-01 23:00:37
news-image

அதிகரிக்கிறது பெற்றோலின் விலை !

2023-02-01 22:28:16
news-image

வேட்பாளர்கள் செலுத்திய கட்டுப்பணத்திற்கு என்ன நடந்தது...

2023-02-01 22:33:15
news-image

உள்ளூராட்சிமன்ற சபைகளை கலைக்கும் அதிகாரம் எமக்கு...

2023-02-01 18:47:56
news-image

13 ஐ அமுல்படுத்தினால் தமிழ் -...

2023-02-01 18:44:58
news-image

சிங்கள- தமிழ் இனக்கலவரம் மீண்டும் தோற்றம்...

2023-02-01 18:45:41