ஆக்கிரமிப்பு இராணுவம் என கருதப்படும் இந்திய அமைதிப்படையினருக்கு எதிரான மக்கள் யுத்தத்தில் குமார் குணரட்ணம் ஈடுபட்டது தவறா என முன்னிலை சோசலிச கட்சி கேள்வி எழுப்பியுள்ளது
முன்னிலை சோசலிச கட்சியின் தலைவர் குமார் குணரட்ணம் அவுஸ்திரேலிய பிரஜாவுரிமையை கைவிட்டுவிட்டார் என அவரது கட்சி தெரிவித்துள்ளது.
குமார் குணரட்ணம் இரட்டை பிரஜாவுரிமையை கொண்டுள்ளார் இந்திய அமைதிப்படையினரை கொலை செய்த குற்றச்சாட்டு அவருக்கு எதிராக உள்ளது என சமீபத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள முன்னிலை சோசலிச கட்சி குமார் குணரட்ணம் இலங்கை பிரஜாவுரிமையை மாத்திரம் கொண்டுள்ளார் என தெரிவித்துள்ளது.
ஆக்கிரமிப்பு இராணுவம் என கருதப்படும் இந்திய அமைதிப்படையினருக்கு எதிரான மக்கள் யுத்தத்தில் குமார் குணரட்ணம் ஈடுபட்டது தவறா எனவும் முன்னிலை சோசலிச கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
செய்தியாளர் மாநாட்டில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னிலை சோசலிச கட்சியின் கல்வி செயலாளர் புபுது ஜெயகொட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குமார் குணரட்ண இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர் என தெரிவித்துள்ளார் குமார் குணரட்ணவை பசில் ராஜபக்சவுடன் ஒப்பிட்டுள்ளார் என சுட்;டிக்காட்டியுள்ளார்.
குமார் குணரட்ண தற்போது அமெரிக்க பிரஜாவுரிமையை கொண்டிருக்கவில்லைஇஅவுஸ்திரேலிய பிரஜாவுரிமையை அவர் கைவிட்டு இலங்கை பிரஜாவுரிமையை ஏற்றுக்கொண்ட தருணத்தில் பிரதமராக பதவி வகித்தவர் ரணில் விக்கிரமசிங்க எனவும் புபுது ஜெயகொட சுட்டிக்காட்டியுள்ளார்.
வேண்டுமென்றே ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் பிழையான அறிக்கையை விடுத்துள்ளார் எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
குமார் குணரட்ணம் ஏன் தனது அடையாளத்தை மறைத்துக்கொண்டு அவுஸ்திரேலியா செல்லவேண்டிய நிலையேற்பட்டது-ஜனாதிபதியாக பதவி வகித்தவேளை மகிந்த ராஜபக்ச அவரை கொலை செய்ய முற்பட்டார்இ இதன் காரணமாகவே கட்சி அவரை வெளிநாட்டிற்கு அனுப்ப தீர்மானித்ததுஇஎன தெரிவித்துள்ள புபுது ஜெயகொட குமார் குணரட்ணம் நாடு திரும்பி அரசியலில் ஈடுபடுவதற்கு தீர்மானித்தவேளை ரணில் விக்கிரமசிங்க என்ன செய்தார் ஒருவருடத்திற்கு அவரை சிறையில் அடைத்தார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதன் அவரை விடுதலை செய்யவேண்டும் என கோரி ஒரு வருட காலத்திற்கு மேல் எங்கள் கட்சியை சேர்ந்தவர்களும் மனித உரிமை செயற்பாட்டாளர்களும் பொதுமக்களும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
குமார் குணரட்ணத்திற்கு இலங்கை பிரஜாவுரிமை வழங்கப்பட்டவேளை பிரதமராக பதவி வகித்த ரணில் விக்கிரமசிங்க குடிவரவு குடியகல்வு திணைக்களம் மற்றும் ஆள்பதிவு திணைக்களத்திற்கு பொறுப்பாகயிருந்தார்இஇதன் காரணமாக குமார் குணரட்ணம் இரட்டை பிரஜாவுரிமைக்குரியவர் இல்லை என்பது நன்கு தெரியும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்திய அமைதிப்படையை இலக்குவைத்து குமார் குணரட்ணம் குண்டுகளை வைத்தார் என ஜனாதிபதி குற்றம்சாட்டியுள்ளார்இஇந்திய அமைதிப்படை என்பது ஆக்கிரமிப்பு இராணுவம் இலங்கை மக்கள் அதற்கு எதிராக போரிட்டனர் எனவும் புபுதுஜெயகொட தெரிவித்துள்ளார்.
குமார் குணரட்ணம் மக்கள் மத்தியிலிருந்தார் இராணுவம் இலங்கை மீது படையெடுக்கும் போது நாங்கள் எதனையும் செய்ய கூடாதா?அந்தவேளை விக்கிரமசிங்க இடம்பெற்றிருந்த ஜே.ஆர் ஜெயவர்த்தன அரசாங்கம் இந்தியாவிடம் மண்டியிட்டது மக்கள் போரிட்டனர் அந்த போராட்டத்தை ஒழுங்கமைப்பதில் குணரட்ணம் பங்களிப்பு வழங்கினார் அதில் என்ன தவறு எனவும் புபுதுஜெயகொட கேள்வி எழுப்பியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM