தலையில் தாக்கப்பட்ட காயங்களுடன் மஹாவெலவில் பெண்ணின் சடலம் மீட்பு!

28 Nov, 2022 | 12:11 PM
image

மஹாவெல, மானின்கமுவ பிரதேசத்தில் பெண் ஒருவர் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண் வீட்டில் இருந்து காணாமல்போயுள்ளதாக மஹவெல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து வீட்டைச்  சோதனயிட்டபோதே பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட பெண் பல்லேபொல, மானின்கமுவ பிரதேசத்தில் வசித்த 55 வயதுடையவராவார்.

சடலம் தொடர்பில் நீதிவான் விசாரணைகள் இடம்பெற்றபோது, தலையில் கூரிய ஆயுதத்தால்  தாக்கிய காயங்கள்  காணப்பட்டமையால் இது கொலைச் சம்பவம் என தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர் தனது சகோதரன் வீட்டில் வசித்து வந்த  திருமணமாகாத பெண்ணாவார்.  

சடலம் மாத்தளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன்  சந்தேக நபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மஹாவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மலையகத் தமிழர்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு அமெரிக்காவின்...

2023-02-08 13:30:31
news-image

ஒற்றையாட்சி முறைக்குள் அதிகாரப் பகிர்வை சாத்தியப்படுத்த...

2023-02-08 13:11:01
news-image

கல்வியங்காட்டு சந்தை வியாபாரிகள் 13 பேருக்கு...

2023-02-08 11:30:14
news-image

வவுனியா பொது வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு...

2023-02-08 12:20:07
news-image

ஒற்றையாட்சிக்குள் அதிகப்பட்ச அதிகாரப்பகிர்வு : வடக்கு,...

2023-02-08 11:05:35
news-image

அரசியல் அழுத்தங்களுக்கு ஒருபோதும் அடிபணியப் போவதில்லை...

2023-02-08 10:47:04
news-image

பௌத்தமதகுருமாரின் ஆர்ப்பாட்டம் - பதற்றநிலை

2023-02-08 10:59:33
news-image

ஓட்டமாவடியில் அரச பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான கவனயீர்ப்புப்...

2023-02-08 12:16:51
news-image

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் வேலை...

2023-02-08 12:16:25
news-image

யாழ். கல்வியங்காடு சந்தை வியாபாரிகள் 13...

2023-02-08 12:02:34
news-image

புதிய வரிக்கொள்கையை ஏற்றுக்கொண்டவர்களே இன்று அதனை...

2023-02-08 10:40:35
news-image

இலங்கைக்கான துருக்கி தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகரும்...

2023-02-08 09:53:42