(எம்.வை.எம்.சியாம்)
நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் அதிகபட்சமாக 13,200 கைதிகளை அடைத்து வைக்கும் திறன் உள்ளது. ஆனால் தற்போது 26,000 கைதிகள் சிறைச்சாலைகளில் இருப்பதாக மேலதிக ஆணையாளர் பொது ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
அதன்படி, இவர்களில் 13,300 கைதிகள் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டின் காரணமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.மேலும் சிறைகளில் உள்ள ஏனைய கைதிகளின் எண்ணிக்கை 10,000 மற்றும் சந்தேக நபர்களின் எண்ணிக்கை 16,000 காணப்படுகிறது.
இந்த வருடத்தின் ஆரம்பத்துடன் நாட்டில் உள்ள ஒவ்வொரு சிறைச்சாலைகளிலும் சிறைச்சாலைகளுக்குள் பிரவேசிக்கும் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் எண்ணிக்கை 1,177 ஆகும். இவர்களுள் மரண தண்டனை உறுதி செய்யப்பட்ட கைதிகளின் எண்ணிக்கையில் 12 பெண்கள் உட்பட 642 பேர் உள்ளடங்குகின்றனர். மேலும் மரண தண்டனை உறுதிப்படுத்தப்பட்டு மேல்முறையீடுகளைச் சமர்ப்பித்த 15 பெண்கள் உட்பட 535 பேர் காணப்படுகிறார்கள். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சுமார் 500 பேரும் சிறைகளில் உள்ளனர் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM