மும்பை தீவிரவாத தாக்குதலின் 14ஆவது ஆண்டு நினைவு நாளில், மும்பை தாக்குதலில் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த இந்தியா மற்றும் பிற சர்வதேச பங்குதாரர்களுடன் தொடர்ந்து பணியாற்றுவோம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்த கொடூரச் செயலில் ஆறு அமெரிக்க குடிமக்கள் உட்பட உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் எண்டனி பிளிங்கன் குறிப்பிட்டுள்ளார்.
26/11 கொடூரமான தாக்குதலுக்கு 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள மக்களுடன் இணைந்து உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கிறோம் என்று அவர் கூறினார்.
தீவிரவாதம் மனித குலத்தை அச்சுறுத்துகிறது. 26/11 தீவிரவாதிகளின் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூருவதில் உலகமே இந்தியாவுடன் இன்று இணைந்து கொள்கிறது.
இந்தத் தாக்குதலைத் திட்டமிட்டு மேற்பார்வையிட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். உலகம் முழுவதும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என்றும் பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM