(எம்.மனோசித்ரா)
தனிப்பட்ட பயணத்தை மேற்கொண்டு வெளிநாடு சென்றிருந்த முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ அண்மையில் நாடு திரும்பிய போது, விமான நிலைய செயற்பாடுகளுக்கான கட்டணங்கள் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தினால் செலுத்தப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் விளக்கமளித்து பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தனிப்பட்ட பயணத்தை மேற்கொண்டு வெளிநாடு சென்றிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ அண்மையில் நாடு திரும்பினார்.
அவர் நாடு திரும்பியதற்குரிய விமான நிலைய செயற்பாடுகள் தொடர்பில் போலியான தகவல்கள் வெளியிடப்படுகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.
பஷில் ராஜபக்ஷ சட்ட ரீதியாகவே விமான நிலைய வளாகத்தைப் பயன்படுத்தியிருக்கின்றார். சிவில் விமான சேவைகள் நிறுவனத்தின் ஆவணங்களுக்கமைய இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பஷில் ராஜபக்ஷ தனது மனைவியுடன் விமான நிலையத்தின் முக்கிய பிரமுகர்கள் நுழைவாயிலைப் பயன்படுத்தியுள்ளதோடு , அதற்காக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்திற்கு 400 டொலர் கட்டணத்தையும் செலுத்தியுள்ளார்.
விமான நிலைத்திற்கு செல்லும் போதும் அங்கிருந்து வெளியேறும் போதும் எந்தவொரு நபருக்கும் கட்டணத்தை செலுத்தி , முக்கிய பிரமுகர்கள் நுழைவாயிலைப் பயன்படுத்த முடியும் என்பது அனைவரும் அறிந்த விடயமாகும்.
எனவே அவர் கட்டணத்தை செலுத்தி அந்த நுழைவாயிலைப் பயன்படுத்தியமை எந்தவகையிலும் சட்டத்திற்கு முரணான செயல் அல்ல.
அத்தோடு அவரை வரவேற்பதற்காக சென்ற சிலலும் இதே முறைமையின் கீழ் முக்கிய பிரமுகர்கள் நுழைவாயிலைப் பயப்படுத்தியுள்ளதோடு, அவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேநீர் விருந்திற்கும் பஷில் ராஜபக்ஷவின் தரப்பினர் உரிய கட்டணத்தை செலுத்தியுள்ளனர்.
இந்த கட்டணத்தை விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் செலுத்தியுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானவையாகும்.
பஷில் ராஜபக்ஷ விமான நிலைய வளாகத்தைப் பயன்படுத்திமையால் அரசாங்கத்திற்கோ அல்லது வேறு நிறுவனங்களுக்கோ எவ்வித நஷ்டமும் ஏற்படவில்லை.' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM