சேனையூர் கிராமத்தில் கணினி வளநிலையம் ஆரம்பித்து வைப்பு

By Ponmalar

28 Nov, 2022 | 11:35 AM
image

வன்னி ஹோப் மற்றும் ரட்ணம் பவுன்டேஷன் நிறுவன அனுசரணையில் மூதுார் சேனையூர் கிராமத்தில் அனாமிகா பண்பாட்டு மைய வளாகத்தில் கணினி வளநிலையம் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு கடந்த 26ஆம் திகதி அனாமிக்கா பண்பாட்டு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் ரட்ணசிங்கம் தலமையைில் இடம்பெற்றது.

டிஜிட்டல் கல்வியை கிராமங்களில் மேம்படுத்தும் நோக்குடன் அவுஸ்ரேலியாவில் இயங்கி வரும் வன்னி ஹோப் மற்றும் ஐக்கிய இராஜியத்தில் இயங்கிவரும் ரட்ணம் பவுன்டேஷன் நிறுவனங்களின் நிதிப்பங்களிப்புடன் மேற்படி கணினி வளநிலையம் ஸ்தாபிக்கப்பட்டு மக்கள் பாவணைக்காக கையளிக்கப்பட்டது.

குறித்த கணனி வளநிலையத்தின் மூலம் சம்பூர், சேனையூர் போன்ற கிராமங்களில் உள்ள பாடசாலை மாணவர்கள், இளைஞர் யுவதிகள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் போன்றவர்கள் கணனி அறிவினைப் பெற்று நன்மையடையவுள்ளனர்.

இந்த நிகழ்வில் அவுஸ்ரேலியாவில் இருந்து வருகை தந்திருந்த வன்னி ஹோப் நிறுவனத்தின் செயலாளர் டாக்டர் மாலதி வரண், வன்னி ஹோப் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளரும் மக்கள் சேரைவ மன்றத்தின் தலைவருமான எம். ரீ. எம். பாரிஸ், அனாமிக்கா பண்பாட்டு  மையத்தின் இயக்குநர் திருமதி பாலசுகுமார் உட்பட பெற்றோர்கள், மாணவர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகத் தமிழ் வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில்...

2023-02-02 16:28:23
news-image

தேர்தலில் ஐ.தே.க மற்றும் அதன் கூட்டணி...

2023-02-02 16:15:43
news-image

இலங்கையில் டாட்டா ஸ்டீல் மற்றும் டாட்டா...

2023-02-02 15:20:49
news-image

முல்லைத்தீவில் மாபெரும் மரதன் ஓட்டப் போட்டி

2023-02-01 14:17:01
news-image

கலா பொல 2023 : இலங்கையில்...

2023-02-01 11:18:16
news-image

வர்ண இரவு பரிசளிப்பு வைபவம்

2023-01-31 15:13:25
news-image

பண்ணிசை பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்...

2023-01-31 21:27:49
news-image

பதுளை நகரில் மாணிக்கக்கல் விற்பனை சந்தை...

2023-01-31 13:06:30
news-image

ஊடகவியலாளர்களுக்கான விழிப்பூட்டும் கலந்துரையாடல்

2023-01-31 12:30:29
news-image

மகாத்மா காந்தியின் 75 வது நினைவு...

2023-01-30 12:35:58
news-image

யாழ் சாரண ஆணையாளராக மேலதிக மாவட்ட...

2023-01-30 11:33:28
news-image

75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு...

2023-01-30 11:32:31