நாடளாவிய ரீதியில் பெய்து வரும் தொடர் மழையினால் டெங்கு நோயாளர் தொகை மேலும் அதிகரிப்பதற்கான சாத்தியமுள்ளதாகவும் கடந்த 11 மாதக்காலப்பகுதியில் 47182 டெங்கு நோயாளர்கள் நாடு முழுவதிலும் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

அத்துடன் அதிக தொகையிலான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் இணங்கானப்பட்டுள்ளதாகவும் குறித்த அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த 11 மாத காலப்பகுதியில் நாடு முழுவதிலும் 47182 டெங்கு நோயாளர்கள்  பதிவாகியுள்ளனர். அத்துடன் குறித்த டெங்கு நோயில் பாதிக்கப்பட்டு 76 பேர் இதுவரையில் இறந்துள்ளனர். மேல் மாகாணத்தின் கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 14376 டெங்கு நோயாளர்களாக கண்டறியப்பட்டுள்ளனர். இதேவேளை கம்பஹா மாவட்டத்தில் 6000 பேரும் களுத்துறை மாவட்டத்தில் 3088 கண்டியில் 3754 பேரும் காலி மாவட்டத்தில் 2394 பேரும் டெங்கு நோயாளர்களாக கண்டறியப்பட்டுள்ளனர்

மேலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் 2026 பேரும் குருணாகலையில் 2286 பேரும் இரத்தினபுரி மாவட்டத்தில் 2729 மற்றும்  கேகாலையில் 1357 பேரும் பதுளையில் 1032 டெங்கு நோயாளர்களும் இணங்கானப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் டெங்கு நோயிக்கான அறிகுறிகள் தென்பட்டால் மற்றும் 3 நாட்களுக்கு மேல் தொடர்ச்சியான காய்ச்சல் இருப்பின் உடனடியாக வைத்திய ஆலோசணையை பெற்றுக்கொள்ளுமாறும் சுகாதார அமைச்சு தகவல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.