'அறிவார்ந்த சமூகத்திற்கான வாசிப்பு' போட்டி நிகழ்வு

By Ponmalar

28 Nov, 2022 | 11:23 AM
image

தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் நிர்வாகத்திற்குட்பட்ட  பொது நூலகங்களில்  'அறிவார்ந்த சமூகத்திற்கான வாசிப்பு'  என்ற தலைப்பில் மேற்கொள்ளப்பட்ட நிகழ்ச்சி திட்டங்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு கடந்த 26ஆம் திகதி சனிக்கிழமை ஓட்டமாவடி பல நோக்கு கூட்டுறவு சங்க கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

மீராவோடை பொது நூலக நூலகர் க.ருத்திரன் தமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் பிரதம அதியாக கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம்.நெபர் கலந்து கொண்டார்.கௌரவ அதியாக உப தவிசாளர் ஏ.ஜி.அமீர் உட்பட சபை உறுப்பினர்கள கலந்து கொண்டார்கள்

நிகழ்வின் ஆரம்பமாக  அதிதிகள் மலர்மாலை அணிவித்து முன்பள்ளி மாணவர்களின் பேண்ட் வாத்திய இசையுடன் வரவேற்கப்பட்டனர்.

தொடர்ந்து இறைவணக்கத்துடன் ஓட்டமாவடி பொது நூலக நூலகர்  எம்.எவ்.பாத்திமாபானுவின் வரவேற்பு உரையுடன் நிகழ்வுகள் யாவும் ஆரம்பிக்கப்பட்டது.

அல் அனிக்கா,உதுமான்,மயிலங்கரச்சை பாராதி முன் பள்ளி மாணவர்களின் கலாச்சார நடன நிகழ்வுகள் நடைபெற்றது.

தொடர்ந்து ஆசிய மன்றத்தினால் அன்பளிப்பு செய்யப்பட்ட 8 இலட்சம் ரூபா பெறுமதியான நூல்கள் சபையின் நிர்வாகத்திற்குட்பட்ட 6 நூலகங்களுக்கும் கையளிக்கப்பட்டது.

போட்டி நிகழ்ச்சிகளில் பங்குபற்றிய மாணவர்களுக்கான பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. சிறந்த வீட்டுத்தோட்ட பயிர்செய்கையாளர்கள் சிறந்த வாசகர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

நூலகத்தினை பயன்படுத்தியும் இம்முறை க.பொ.த சாதாரண பரீட்சையில் தோற்றி 9 ஏ சித்தி பெற்ற ஓட்டமாவடி மத்திய கல்லூரி மணவன் ஏ.எம்.மின்ஜாஜ் தவிசாளரின் சொந்த நிதி பங்களிப்பு வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டார் மற்றும் சிற்றி காடன் நிறுவனத்தினால்  சபை முன்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பலன் தரும் மரங்கன்றுகளை சிறந்த முறையில் பராமரித்தோருக்கான விசேட பரிசில்கள் வழங்கப்பட்டன.

நிகழ்வின் சிறப்பு நிகழ்சியாக மட்டக்களப்பு கதிரவன் பட்டி மன்ற பேரவையினால் 102 அவது சிறப்பு பட்டி மன்ற நிகழ்வான 'அறிவார்ந்த சமூகத்திற்கான வாசிப்பு'   தொடர்கிறதா இடர்கிறதா என்ற தலைப்பில் த.இன்பராஜா தலைமயில் நடைபெற்றது.

அத்துடன் அவர்களினால் நகைச்சுவை நாடகமும் நடைபெற்றது. நிகழ்வில் கலந்து கொண்டவர்களிடம் குறித்த நிகழ்வுகள் அமோக வரவேற்பை பெற்றது.

சேக்கிள் இளம் பெண்கள் அமைப்பினர் மற்றும் கதிரவன் பட்டி மன்ற பேரவையினர் மாவட்டத்திற்கு ஆற்றி வரும் சேவையினை பாராட்டி சேவை நலன் பாராட்டு நினைவு சின்னங்கள் வழங்கி கௌரவிக்க்ப்பட்டனர்.மேற்படி நிகழ்வுகள் யாவும் தேசிய வாசிப்பு ஓக்டோபர் மாத 2022 நிகழ்வினை முன்னிட்டு தேசிய நூலக ஆவணவாக்கல் சபையின் ஆலோசனைக்கிணங்க தவிசாளரின் வழிகாட்டலில் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'ஆர்ட் ஒப் ஸ்ரீலங்கா' ஓவியக் கண்காட்சி

2023-02-06 14:34:16
news-image

மணிமேகலை பிரசுரத்தின் 32 நூல்களின் அறிமுக...

2023-02-06 13:08:25
news-image

சந்தா வாங்காத சங்கம் - சிவி...

2023-02-06 12:56:10
news-image

நல்லூர் கந்தன் ஆலய தைப்பூச திருவிழா

2023-02-06 11:44:58
news-image

யாழ். இணுவில் கந்தசுவாமி கோவில் உலகப்பெருமஞ்ச...

2023-02-06 11:36:18
news-image

இராமகிருஷ்ண மிஷன் சிவாநந்த நலன்புரி நிலையத்திற்கு...

2023-02-06 11:13:02
news-image

நல்லூர் கந்தன் ஆலயத்தில் நெற்புதிர் அறுவடை...

2023-02-04 18:36:27
news-image

யாழில் 75ஆவது சுதந்திர தின நிகழ்வுகள்  

2023-02-04 18:35:59
news-image

தியாகராஜர் கலைக்கோயில் மாணவி பிரியங்கா குகப்ரியாவின்...

2023-02-04 18:35:17
news-image

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சத்ய சாய் சேவா...

2023-02-04 18:34:43
news-image

இலங்கையின் 75 ஆவது சுதந்திரதினத்தை முன்னிட்டு...

2023-02-04 18:23:12
news-image

இலங்கையில் டாட்டா ஸ்டீல் மற்றும் டாட்டா...

2023-02-04 13:49:11