நாஜி நவுஷி என்ற பெண்மணி கால்பந்தாட்ட வீரர் மெஸியின் ஆட்டத்தை நேரில் பார்க்க இந்தியாவில் இருந்து கத்தாருக்கு காரில் தனியாக பயணம் மேற்கொண்டுள்ளார்.
33 வயதாகும் நாஜி நவுஷி 5 குழந்தைகளின் தாயாவார். அவர் ஆர்ஜென்டீனா கேப்டனும், நட்சத்திர வீரருமான லயோனல் மெஸியின் அதிதீவிர ரசிகை. களத்தில் தனது அபிமான ஹீரோவின் சாகசத்தை கண்ணாரக் கண்டு ரசிக்க வேண்டும் என்பதே நவுஷியின் கார் பயணத்தின் நோக்கமாகும்.
நவுஷி மலையாள தேசத்தில் இருந்து 'மணல் தேசத்துக்கு' தனது பயணத்தை கடந்த மாதம் முதலாம் திகதி ஆரம்பித்தார்.
அவரது கார், மும்பையில் இருந்து ஓமன் நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. ஓமன் தலைநகர் மஸ்கட்டில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் வழியாக கத்தாருக்கு நவுஷி தானே தனியாக காரை ஓட்டிச்சென்றார்.
இவரின் நாயகரின் அணியான ஆர்ஜன்டீனா, சவுதி அரேபியாவுக்கு எதிராக அதிர்ச்சி தோல்வி அடைந்தது. அதில் அனேக ஆர்ஜன்டீனா ரசிகர்களைப் போல நவுஷிக்கும் வருத்தம் தான். ஆனால், 'உலக கோப்பையை வெல்லும் ஆர்ஜன்டீனாவின் பயணத்தில் இது ஒரு சிறு பின்னடைவுதான். எனது ஹீரோ மெஸி ஆடுவதை நேரில் காணப்போகிறேன் என்பதே என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது' என தெரிவித்துள்ளார்.
நவுஷியின் மனம் கவர்ந்த முன்னாள் சாம்பியன் ஆர்ஜன்டீனா, கட்டாய வெற்றி நெருக்கடியில் சனிக்கிழமை (26) நள்ளிரவு மெக்சிகோவை சந்தித்து வெற்றி பெற்றது. நவுஷியின் கார் ஒரு நகரும் வீடாகவே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மேற்புறத்தில் கூடார வசதியும், காருக்குள் மினி சமையல்கூடமும் அமைக்கப்பட்டுள்ளன.
அரிசி, கோதுமை மாவு, மசாலாக்கள் போன்ற சமையல் பொருட்களையும் போதுமான அளவு இருப்பில் வைத்திருக்கிறார். தனக்குத் தேவையான உணவுகளை தானே சமைத்துக்கொள்கிறார். நாஜி நவுஷி தனது காருக்கு 'ஊலு' என்று செல்லப்பெயர் சூட்டியிருக்கிறார். இந்த மலையாள வழக்குமொழிச் சொல்லுக்கு 'அவள்' என்று பொருள். கால்பந்து காதலி நவுஷியை சுமந்துகொண்டு பாலைவன மண்ணில் பறந்துகொண்டிருக்கிறது.
மூலம் ; மாலை மலர்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM