மின் கம்பத்தில் மோதி அந்தரத்தில் தொங்கிய விமானம் - இருளில் மூழ்கிய ஒரு இலட்சம் வீடுகள்

Published By: Digital Desk 2

28 Nov, 2022 | 10:35 AM
image

அமெரிக்காவில் ஞாயிற்றுக்கிழமை (நவ. 27)  2 பேர் பயணித்த சிறிய ரக விமானம் ஒன்று மின் கம்பத்தின் மீது மோதி அந்தரத்தில் சிக்கிக்கொண்டதால் சுமார் ஒரு இலட்சம் வீடுகள் இருளில் மூழ்கியதான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாநிலம் மொவ்ண்ட்கொமெரி நகரத்தின் ஹைதுர்பர்க் என்ற பகுதியில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான வீடுகள் உள்ளன.

இந்நிலையில், மொவ்ண்ட்கொமெரி நகருக்கு மின் விநியோகம் வழங்கும் மின் கம்பத்தில் மீது நேற்று இரவு சிறிய ரக விமானம் மோதி அந்தரத்தில் தொங்கியுள்ளது.

குறித்த விமானம் மோதியதால் மின் இணைப்பு தடைபட்டது. இதனால், 1 லட்சம் வீடுகள், தொழில்நிறுவனங்களில் மின் இணைப்பு தடைபட்டுள்ளது.

இது குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மின்கம்பத்தின் மீது மோதி அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் விமானத்தில் சிக்கிய 2 பேரையும் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். 

மேலும், விமானம் மோதியதால் இருளில் மூழ்கிய நகருக்கு மின் இணைப்பை மீண்டும் வழங்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லண்டன் தேம்ஸ் நதிக்கரையில் முதன்முறையாக பிரமாண்ட...

2026-09-14 18:03:38
news-image

தென்னாபிரிக்காவில் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி...

2026-09-14 17:32:32
news-image

“அன்பு சகோதரர் அஜித்துக்கு, பிரியமுடன் விஜய்”...

2026-09-14 13:56:20
news-image

“கவிழ்ந்த படகின் அடியில் இன்னும் என்...

2026-09-14 12:24:17
news-image

இந்தோனேஷிய பயணிகள் கப்பல் விபத்து: உயிரிழந்தோரின்...

2026-09-14 11:58:33
news-image

2027க்கான பிரிக்ஸ் தலைமையை ஏற்றது சீனா

2026-09-14 12:02:27
news-image

சிலியில் முதியோர் இல்லத்தில் பயங்கர தீ...

2026-09-14 10:37:10
news-image

போரிஸ் ஜோன்சன் உட்பட ஐரோப்பிய அதிகாரிகள்...

2026-09-14 10:59:57
news-image

ஜாவா கடலில் மாயமான இந்தோனேஷிய பயணிகள்...

2026-09-13 13:27:33
news-image

இந்தியப் பிரதமர் மோடி அளித்த இரவு...

2026-09-13 12:44:55
news-image

இந்தோனேஷியாவில் 243 பயணிகளுடன் சென்ற கப்பல்...

2026-09-13 11:02:52
news-image

லண்டன் கார் பந்தயத்தில் வரலாற்றுச் சந்திப்பு:...

2026-09-13 12:53:28