சீனாவில் கொவிட் -19 பரவல் மீண்டும் அதிகரித்திருக்கும் நிலையில் அங்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதேநேரம் கட்டுப்பாடுகளை எதிர்த்து எதிர்ப்புக் குரல்கள் நாடு முழுவதும் எழுந்துள்ளன.
கொவிட் பெருந்தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகளாகவே உலக அளவில் பெரும் பொருளாதார பின்னடைவுகள் ஏற்பட்டு தற்போது சீராகி வரும் நிலையில் கொவிட் வைரஸ் முதன் முதலில் பரவிய நாடான சீனாவில் அண்மையில் மீண்டும் கொவிட் தொற்று அதிகரித்து வருகின்றது.
30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொவிட் தொற்றிற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் நாடு முழுவதும் பல பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொவிட் கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலை அங்கு ஏற்பட்டுள்ளது.
சீனாவின் தலைநகர் பீஜிங் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சீனாவின் மேற்கு மாகாணத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தார்கள். இதற்கு காரணம் கடுமையான கொவிட் கட்டுப்பாடுதான் என்று அரசுக்கு எதிராக மக்கள் போராட்டங்களை முன்னெடுக்க துவங்கினர். இப்படி நாட்டின் பல இடங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தங்கள் ஊடகவியலாளர் கைது செய்யப்பட்டு தாக்கப்பட்டமை கவலை அளிப்பதாக பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில்,
"ஷங்காயில் நடந்த போராட்டங்களில் செய்தி சேகரிக்கும் போது கைது செய்யப்பட்டு கைவிலங்கிடப்பட்ட எங்கள் ஊடகவியலாளர் எட் லாரன்ஸ் நடத்தப்பட்ட விதம் கவலை அளிக்கிறது. அவர் விடுவிக்கப்படுவதற்கு முன்பு பல மணி நேரம் காவலில் வைக்கப்பட்டார். அவர் கைது செய்யப்பட்ட போது பொலிஸாரால் தாக்கப்பட்டார். அவர் அங்கீகாரம் பெற்ற ஊடகவியலாளராக பணிபுரியும் போது குறித்த சம்பவம் நடந்தது" என பிபிசி தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM