ஜேர்மனி - ஸ்பெய்ன் வெற்றிதோல்வியின்றி முடிவு : இரண்டு அணிகளும் நொக் - அவுட் சுற்றுக்கு செல்வதில் சிக்கல்

By Digital Desk 2

28 Nov, 2022 | 09:24 AM
image

(நெவில் அன்தனி)

ஜேர்மனிக்கும் ஸ்பெய்னுக்கும் இடையில் அல் பெய்த் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (நவ. 27) மிகவும் பரபரப்பையும் விறுவிறுப்பையும் ஏற்படுத்திய ஈ குழு உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டி 1 - 1 என்ற கோல் அடிப்படையில் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.

இக் குழுவில் இடம்பெறும் ஜப்பானை கொஸ்டா ரிக்கா வெற்றிகொண்டதால், இரண்டாம் சுற்றுக்கு தகுதிபெறுவதற்கான வாய்ப்பு ஜேர்மனிக்கு சிறிய அளவில் தோன்றியுள்ளது. ஆனால், இரண்டு அணிகளும் சிக்கலை எதிர்நோக்க வேண்டிவரலாம்.

ஆரம்பம் முதல் கடைசிவரை வேகமும் விறுவிறுப்பும் நிறைந்ததாக அமைந்த இப் போட்டியின் 40ஆவது நிமிடத்தில் ஜேர்மனி வீரர் ரூடிகர் போட்ட கோல் ஓவ் சைட் என வீடியோ உதவி மத்தியஸ்தரால் தீர்மானிக்கப்பட்டது.

அது ஜேர்மனிக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது. அதேவேளை ஸ்பெய்ன் சார்பாக கோலை நோக்கி ஒல்மோ பலமாக உதைத்த பந்தை நோயர் கையால் தட்டிவிட அது குறுக்குக் கம்பத்தில் பட்டு திசை திரும்பியது.

இடைவேளையின்போது இரண்டு அணிகளும் கோல் போட்டிருக்கவில்லை.

இடைவேளைக்குப் பின்னரும் இரண்டு அணிகளும் கோல் போடுவதற்கு கடுமையாக முயற்சித்ததால் ஆட்டம்   சூடு பிடித்தது. இதன் காரணமாக இரண்டு அணிகளிலும் சில வீரர்களுக்கு மத்தியஸ்திரினால் மஞ்சள் அட்டை காட்டப்பட்டது.

போட்டியின் 62ஆவது நிமிடத்தில் அல்பா இடதுபுறத்தில் இருந்து பரிமாறிய பந்தை மாற்று வீரர் அல்வாரோ மொராட்டா மிக இலாகவமாக கோலினுள் புகுத்தி ஸ்பெய்னை முன்னிலையில் இட்டார்.

ஆனால், அந்த கோலினால் துவண்டு விடாமல் தொடர்ந்தும் ஆக்ரோஷத்துடன் விளையாடிய ஜேர்மனி போட்டியின் 83ஆவது நிமிடத்தில் மாற்று வீரர் நிக்லாஸ் ஃபுல்க்ரக் போட்ட கோல் மூலம் கோல் நிலையை சமப்படுத்தியது.

அதன் பின்னர் இரண்டு அணிகளும் வெற்றிகோலை போடுவதற்கு எடுத்து முயற்சிகள் கைகூடாமல் போக போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.

இந்தப் போட்டி முடிவை அடுத்து ஜேர்மனி ஒரே ஒரு புள்ளியுடன் தொடர்ந்தும் ஈ குழுவில் கடைசி இடத்தில் இருக்கின்றது.

ஸ்பெய்ன் 4 புள்ளிகளுடன் முதலாம் இடத்திலும் ஜப்பான், கொஸ்டா ரிக்கா ஆகியன 3 புள்ளிகளுடன் நிகர கோல் வித்தியாச அடிப்படையில் முறையே 3ஆம், 4ஆம் இடங்களிலும் இருக்கின்றன.

4 தடவைகள் உலக சம்பியனான ஜேர்மானி, 16 அணிகள் சுற்றில் விளையாட தகுதிபெறுவதற்கு கொஸ்டா ரிக்காவுடனான போட்டியில் வெற்றிபெற்றே ஆக வேண்டும். அதேவேளை, ஜப்பானை ஸ்பெய்ன் வெற்றிகொள்ளவேண்டும். ஸ்பெய்ன் தனது கடைசிப் போட்டியை வெற்றி தோல்வியின்றி முடித்துக்கொண்டாலும் நொக் - அவுட் சுற்றுக்கு முன்னேறிவிடும்.

ஆனால, ஸ்பெய்னுடனான போட்டியில் ஜப்பானும் ஜேர்மனியுடனான போட்டியில் கொஸ்டா ரிக்காவும் வெற்றிபெற்றால் முன்னாள் சம்பயின்களான ஸ்பெய்னும் ஜேர்மனியும் உலகக் கிண்ணப் போட்டியிலிருந்து முதல் சுற்றுடன் நடையைக் கட்டவேண்டிவரும்.

--

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மகளிர் உலகக் கிண்ண இலங்கை குழாத்தில்...

2023-02-01 18:31:57
news-image

வார இறுதியில் இலங்கை மாஸ்டர்ஸ் கூடைப்பந்தாட்டம்

2023-02-01 18:36:17
news-image

பாரிஸ் 2024 ஒலிம்பிக், பராலிம்பிக் அதிகாரி...

2023-02-01 14:38:17
news-image

விசா பிரச்சினை காரணமாக கவாஜாவின் இந்திய...

2023-02-01 13:35:40
news-image

உலகக் கிண்ணத்திற்கான நேரடி தகுதியைக் குறிவைத்து...

2023-02-01 12:27:41
news-image

உலகக் கிண்ணத்தை 3ஆவது தொடர்ச்சியான தடவையாக...

2023-01-31 20:22:35
news-image

பங்களாதேஷ் அணியின் பயிற்றுநராக மீண்டும் சந்திக்க...

2023-01-31 16:19:24
news-image

நான் எந்தவொரு அரசியல் கட்சியையும் சாராதவன்...

2023-01-31 13:48:55
news-image

ஹிமாஷவின் போட்டித் தடை 6 ஆண்டுகளாக...

2023-01-31 15:26:53
news-image

19 வயதுக்குட்பட்ட மகளிர் இருபதுக்கு 20...

2023-01-31 09:59:01
news-image

இங்கிலாந்தை வீழ்த்திய தென்னாபிரிக்கா உலகக் கிண்ணத்தில்...

2023-01-31 09:45:22
news-image

கனிஷ்ட உலகக் கிண்ணத்துடன் சிரேஷ்ட உலகக்...

2023-01-30 22:27:12