கனடா வீரர் டேவிஸ் வேகமான கோலை போட்டபோதிலும் குரோஷியா இலகுவாக வென்றது

28 Nov, 2022 | 06:28 AM
image

(நெவில் அன்தனி)

தோஹா, கலிபா சர்வதேச விளையாட்டரங்கில் ஞாயிறன்று (27) குரோஷியாவுக்கு எதிராக கனடாவை முன்னிலையில் இட்ட அல்போன்சோ டேவிஸ், 2022 பீபா உலகக் கிண்ணத்தில் மிக வேகமான (போட்டி ஆரம்பித்து குறுகிய நேரத்தில்) கோலை புகுத்தி சாதனை நிலைநாட்டினார்.

போட்டியின் 68ஆவது செக்கனில் (2ஆவது நிமிடம்) டேஜன் புக்கானென் வலது புறத்தில் இருந்து பரிமாறிய பந்தை டேவிஸ் தலையால் முட்டி கோல் போட்டு இந்த வருட உலகக் கிண்ணத்திற்கான அதிவேக கோலை பதிவு செய்தார்.

ஈக்வடோருக்கு எதிராக நெதர்லாந்து வீரர் கோடி கெக்போ 6ஆவது நிமிடத்தில் போட்ட கோலைவிட வேகமான கோலாக டேவிஸின் கோல் அமைந்தது.

உலகக் கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் கானாவுக்கு எதிராக 2014 உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் 29ஆவது செக்கனில் அமெரிக்க வீரர் கிளின்ட் டிம்சே  போ ட்ட வேகமான கோலுக்கு பின்னர் அல்போன்சோ  டேவிஸ்   போட்ட கோலே  முதல் சுற்றுக்கான  வேகமான கோலாக அமைந்தது.

இந்த கோலினால் 35ஆவது நிமிடம் வரை ஒரு கோல் பின்னிலையில் இருந்த குரோஷியா எதிர்நீச்சல் போட்டு விளையாடி 4 - 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இலகுவாக வெற்றிபெற்றது.

குரோஷியா சார்பாக அண்ட்ரிஜ் க்ராமரிக் (36ஆவது நிமிடம்), மார்க்கோ லிவாஜோ (44) ஆகிய இருவரும் 8 நிமிட இடைவெளியில் 2 கோல்களைப் போட்டதன் மூலம் குரோஏஷியா முன்னிலை பெற்றது.

இடைவேளையின் பின்னர் குரோஷியா சார்பாக அண்ட்ரெஜ் க்ராமரிக் தனது 2ஆவது கோலை 70ஆவது நிமிடத்தில் புகுத்தியதுடன் உபாதையீடு நேரத்தின் 4ஆவது நிமிடத்தில் லொவ்ரோ மேஜர் அணியின் 4ஆவது கோலைப் போட்டார்.

இந்தப் போட்டியில் வெற்றியீட்டியதன் மூலம் எவ் குழுவுக்கான அணிகள் நிலையில் குரோஏஷியா ஒரு வெற்றி, ஒரு வெற்றிதோல்வியற்ற முடிவு என்ற பேறுபேறுகளுடன் 4 புள்ளிகளைப் பெற்று நிகர கோல்கள் வித்தியாசத்தில் முதலாம் இடத்தில் இருக்கிறது.

பெல்ஜியத்தை எதிர்பாராத வகையில் வீழ்த்திய மோரோக்கோவும் அதே பெறுபேறுகளுடன் 4 புள்ளிகளைப் பெற்று 2ஆம் இடத்தில் இருக்கிறது.

பெல்ஜியம் ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 3 புள்ளிகளைப் பெற்று 3ஆம் இடத்தில் இருக்கிறது. கனடா ஒரு புள்ளியையும் பெறாமல் கடைசி இடத்தில் இருப்பதுடன் உலகக் கிண்ண முதல் சுற்றுடன் வெளியேறுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22