கே .குமணன்
தமிழீழ விடுதலைப்போரில் தம்மை ஆகுதியாக்கிய மாவீரர்களை நினைவேந்தும் மாவீரர் நாள் நிகழ்வுக்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பல்வேறு துயிலுமில்லங்களில் இன்றையதினம் (27) இடம்பெற்றது .
படையினர் மற்றும் பொலிசாரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் மக்கள் தமது பிள்ளைகளை உறவினர்களை நினைவில் இருத்தி துயிலுமில்லங்களுக்கு சென்று தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர் .
முல்லைத்தீவு மாவட்டத்தில் அளம்பில் மாவீரர் துயிலுமில்லம் , முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லம் கோடாலிக்கல்லு மாவீரர் துயிலுமில்லம் ,முள்ளிவாய்க்கால் மாவீரர் துயிலுமில்லம், இரணைப்பாலை மாவீரர் துயிலுமில்லம் ,தேராவில் மாவீரர் துயிலுமில்லம் , வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்லம் ,தேவிபுரம் மாவீரர் துயிலுமில்லம், இரட்டைவாய்க்கால் மாவீரர் துயிலுமில்லம் ,ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம் ,முல்லைத்தீவு நகர கடற்கரை ஆகிய பதினோரு துயிலுமில்லங்களில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றது .
ஒவ்வொரு துயிலும் இல்லங்களும் மக்கள் கூட்டத்தால் நிறைந்து காணப்பட்டது.
இதனைவிடவும் மக்கள் வீடுகளிலும் , வியாபார நிலையங்களிலும் , ஆலயங்களிலும் , பொது இடங்களிலும் விளக்கேற்றி மாவீரரை நினைவேந்தினர் .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM