தோல் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வுக்காக அவுஸ்திரேலிய கடற்கரையில் சுமார் 2,500 பேர் நிர்வாணமாக திரண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உலக அளவில் தோல் புற்றுநோயால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக அவுஸ்திரேலியா உள்ளது. அங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கானோர் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக உலக புற்றுநோய் ஆராய்ச்சி நிதியம் கூறுகிறது.
இந்தநிலையில், அவுஸ்திரேலியாவில் கடந்த ஒரு வாரமாக தோல் புற்றுநோய் விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அவுஸ்திரேலிய மக்கள் வழக்கமான தோல் பரிசோதனைகளை செய்து கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக அந்த நாட்டின் சிட்னி நகரில் உள்ள போண்டி கடற்கரையில் நேற்று காலை வழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதில் ஆண்கள், பெண்கள் என சுமார் 2,500 தன்னார்வலர்கள் பங்கேற்றனர். அவர்கள் சூரிய உதயத்தின்போது கடற்கரை முன்பு நிர்வாணமாக நின்று தோலின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM