ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான உண்மையை வெளிக்கொணர உள்ளூர் மற்றும் சர்வதேச மட்டங்களில் வெளிப்படையான விசாரணை நடத்தப்படும் என கர்தினால்களுக்கு எழுத்துமூலமான வாக்குறுதியை வழங்கியதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டம் நீர்கொழும்பு அலியாப்பொல பிரதேசத்தில் 26 ஆம் திகதி சனிக்கிழமை மாலை இடம்பெற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தலைமையில் இந்த கூட்டம் இடம் பெற்றது.
சஜித் பிரேமதாச அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது, மீண்டும் ஒரு பொதுப் போராட்டம் வந்தால் அவசரகாலச் சட்டத்தையும் இராணுவத்தையும் பயன்படுத்தி தோற்கடிப்பேன் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்புச் சட்டம் மக்களுக்கு வழங்கிய மனித உரிமைகளை மீற முயன்றால் இலட்சக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி அந்த முயற்சிகளை முறியடிப்பார்கள். இலங்கைப் பிரஜைகள் கோழைகளாக இருக்கத் தயாரில்லை. தாங்கள் தைரியசாலிகள் என்று பாராளுமன்றத்திற்குள் தம்பட்டம் அடிப்பதை நிறுத்திவிட்டு இவர்கள் மக்களிடம் செல்ல வேண்டும்.
அடுத்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு நிச்சயமாக மக்கள் ஆணை கிடைக்கும் எனவும், இந்த அரசாங்கத்திற்கு எதிரான ஒரே தீர்வு எமது கூட்டணியே எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் காவிந்த ஜயவர்தன, பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா, முஜிபுர் ரஹ்மான் திஸ்ஸ அத்தநாயக்க உள்ளிட்ட பலர் உரையாற்றினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM