மன்னார் - சிலாபத்துறை கடற் பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 5 மீனவர்களை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் நேற்று (03) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து மீன்பிடி  படகு மற்றும் தங்கூசி வலை ஆகியன  கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் என்பவற்றை மன்னார் கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைத்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.