வியட்நாமில் உயிரிழந்த சாவகச்சேரியை சேர்ந்தவரது உடல் உறவினர்களிடம் சேர்க்கப்பட வேண்டும் - சுகாஷ் வலியுறுத்து!

Published By: Vishnu

27 Nov, 2022 | 01:36 PM
image

வியட்நாமில் இறந்த, யாழ்ப்பாணம் - சாவகச்சேரியை சேர்ந்தவரது உடல் பாதுகாப்பான முறையில் இலங்கைக்கு எடுத்துவரப்பட்டு அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளரும் சட்டத்தரணியுமான கனகரத்தினம் சுகாஷ் வலியுறுத்தியுள்ளார்.

26 ஆம் திகதி சனிக்கிழமை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வட்டுக்கோட்டை அலுவலகத்தில், மாவீரர்களின் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்விலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவன் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையினுடைய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளால் இலங்கையில் வாழமுடியாது இலங்கையில் இருந்து கடல்வழி மார்க்கமாக 306 பேருடன் கனடாவிற்கு செல்வதற்கு முற்பட்ட கப்பல் வியட்நாமில் கரையொதுங்கி அங்கு ஒருவர் இறந்திருக்கின்றார்.

தங்களை இலங்கைக்கு அனுப்ப வேண்டாம் எனக்கூறி அவர் சனிட்டைசர் (தொற்றுநீக்கி) அருந்தி உயிரிழந்துள்ளார். 

அவருடைய மனைவியும் 4 பிள்ளைகளும், யாழ்ப்பாணம் - சாவகச்சேரியிலே எந்தவிதமான உதவிகளும் இல்லாது, இறந்த கணவருடைய உடலை எவ்வாறு கொண்டுவருவது என்று கூட தெரியாமல், அதற்குரிய நடைமுறைகளோ பொருளாதார வசதிகளோ இல்லாமல் அவர்கள் அந்தரித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

ஆகவே அந்த குடும்பத்தினர் குடும்பத் தலைவரை, அவனது இறுதி மரணச் சடங்கில் என்றாலும் பார்க்கின்ற வாய்ப்பு, உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

ஆகவே இறந்தவருடைய உடல் பாதுகாப்பான முறையில், துரிதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு அவரது குடும்பத்தவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதனை நாங்கள் கோரி நிற்கின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் சீன சொக்லேட் வைத்திருந்தவருக்கு அபராதம்

2025-03-21 16:42:33
news-image

மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் ரூ...

2025-03-21 17:16:03
news-image

பொலன்னறுவையில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட...

2025-03-21 16:32:43
news-image

சர்வாதிகார நாடுகளுக்கு இடையே இராணுவ ஒத்துழைப்பு...

2025-03-21 17:05:15
news-image

உலக வங்கியின் பூகோள டிஜிட்டல் மாநாட்டில்...

2025-03-21 17:09:26
news-image

161 ஆவது பொலிஸ் மாவீரர் நினைவேந்தல்

2025-03-21 16:45:59
news-image

ஓய்வூதியத்தை எதிர்பார்த்திருந்த 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு...

2025-03-21 17:07:00
news-image

ஹீத்ரோ விமானநிலையம் மூடப்பட்டது ; ஸ்ரீலங்கன்...

2025-03-21 15:26:30
news-image

மது போதையில் பஸ்ஸை செலுத்திச் சென்ற...

2025-03-21 15:48:13
news-image

15 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்...

2025-03-21 15:24:44
news-image

கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடைய 10...

2025-03-21 14:42:49
news-image

ஜேர்மனிய பெண்ணின் வேட்பு மனு நிராகரிப்பு 

2025-03-21 15:05:25