முட்டைக்கான சரியான விலையை ஒருவார காலத்திற்குள் நிர்ணயிக்குமாறு பணிப்பு

By Digital Desk 2

27 Nov, 2022 | 12:39 PM
image

(இராஜதுரை ஹஷான்)

கோழிகளுக்கான உணவுகளை இறக்குமதி செய்வது தொடர்பில் 1969 ஆம் ஆண்டு முதலாம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகளை கருத்திற்கொண்டு தற்போதைய  விலைக்கு அமைய முட்டை ஒன்றை விற்பனை செய்யக் கூடிய சரியான விலையை ஒருவார காலத்திற்குள் தீர்மானிக்குமாறு அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா நிதி மற்றும் வர்த்தக அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் சனிக்கிழமை (நவ. 26) இடம்பெற்ற அரசாங்க நிதி பற்றிய குழு கூட்டத்தின் போது மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டது.

2022.05.06 ஆம் ம்றறும் 2022.10.21 ஆம் திகதி வெளியிடப்பட்ட 1969ஆம் ஆண்டு முதலாம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட ஒழுங்கு விதிகளுக்கு அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் அனுமதி வழங்கப்பட்டது.

2010 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க சீட்டாட்டத் தொழில் (ஒழுங்குப்படுத்தல்) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் தொடர்பில் அரசாங்க நிதி பற்றிய குழுவில் கலந்துரையாடப்பட்டது,நாட்டின் அபிவிருத்திக்கு வினைத்திறனான வகையில் தயாரிக்கப்பட்டதன் பின்னர் இதற்கான அனுமதி வழங்குவது தொடர்பில் அவதானம் செலுத்துவது பொருத்தமானதாக அமையும் என குழு உறுப்பினர்கள் தெரிவித்தார்கள்.

 சீட்டாட்டத் தொழில் ஒழுங்குப்படுத்தல் அதிகார சபை இல்லாத காரணத்தினால் எழுந்துள்ள சிக்கல்கள் தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.

உலகில் எந்தவொரு நாட்டிலும் சீட்டாட்டத் தொழில் ஒழுங்குப்படுத்தும் நிறுவனமொன்று இல்லாமல் சீட்டாட்டத் தொழிலுக்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்படுவதில்லை என குழுவின் தலைவர் தெரிவித்தார்.

இதுவரை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துக்கு செலுத்தப்படும் வரித்தொகைக்கு மேலதிகமாக சீட்டாட்டத் தொழில் தொடர்பில் செயற்படுவதற்கு எந்த ஏற்பாடுகளும் இல்லை எனவும் அதன் ஆரம்ப கட்டமாக இந்த அனுமதிப்பத்திரத்தை வழஙகுவதற்கு நடவடிக்கை எடுத்ததாகவும் அதிகாரிகள் இதன்போது சுட்டிக்காட்டினார்கள்.

இந்த சீட்டாட்டத் தொழிலுடன் தொடர்புடைய வரி செலுத்தப்படுகின்றதா, அதன் மூலம் எவ்வளவு வரிகள் அரசாங்கத்துக்கு கிடைக்கப் பெற்றுள்ளது தொடர்பில் புரிதலொன்று இல்லாமை, பதிவு செய்யப்பட்ட 4 சீட்டாட்ட தொழில்களுக்கு மேலதிகமாக நடத்தப்படும் சீட்டாட்ட தொழில் தொடர்பில் முறையான ஒழுங்குப்படுத்தல் இல்லாமை உட்பட அதனுடன் தொடர்புடைய பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டன.

2022 ஆம் ஆண்டு 14 ஆம் இலக்க பெறுமதி சேர் வரி சட்டத்தின் கீழான கட்டளைகளும் இதன் போது கருத்திற் கொள்ளப்பட்டு அதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

எனினும் கொள்வனவாளர்கள்,உப ஒப்பந்த முகாமைத்துவத் திட்டத்துக்கு அமைய முற்பணங்களை செலுத்தியுள்ள பின்னணியில் கூட்டு ஆதனக் குடியிறுப்பு விடுதிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள வரி காரணமாக ஏற்படும் சிக்கல்கள் காரணமாக பொது மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக குழு உறுப்பினர்கள் அரச அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டினார்கள்.

அத்துடன் உள்நாட்டு திறைசேரி உண்டியல்கள் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானம்,2012ஆம் ஆண்டு 12ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி, 2022 ஒதுக்கீட்டு (திருத்தச்) சட்டம் ஆகியவற்றுக்கு அரசாங்க நிதி பற்றிய குழு அனுமதி வழங்கியது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தந்தையும், 12 வயது மகளும் நீரில்...

2023-02-08 13:44:08
news-image

மலையகத் தமிழர்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு அமெரிக்காவின்...

2023-02-08 13:30:31
news-image

ஒற்றையாட்சி முறைக்குள் அதிகாரப் பகிர்வை சாத்தியப்படுத்த...

2023-02-08 13:11:01
news-image

கல்வியங்காட்டு சந்தை வியாபாரிகள் 13 பேருக்கு...

2023-02-08 11:30:14
news-image

வவுனியா பொது வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு...

2023-02-08 12:20:07
news-image

ஒற்றையாட்சிக்குள் அதிகப்பட்ச அதிகாரப்பகிர்வு : வடக்கு,...

2023-02-08 11:05:35
news-image

அரசியல் அழுத்தங்களுக்கு ஒருபோதும் அடிபணியப் போவதில்லை...

2023-02-08 10:47:04
news-image

பௌத்தமதகுருமாரின் ஆர்ப்பாட்டம் - பதற்றநிலை

2023-02-08 10:59:33
news-image

ஓட்டமாவடியில் அரச பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான கவனயீர்ப்புப்...

2023-02-08 12:16:51
news-image

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் வேலை...

2023-02-08 12:16:25
news-image

யாழ். கல்வியங்காடு சந்தை வியாபாரிகள் 13...

2023-02-08 12:02:34
news-image

புதிய வரிக்கொள்கையை ஏற்றுக்கொண்டவர்களே இன்று அதனை...

2023-02-08 10:40:35