ஆரோக்கியத்தை பாதிக்கும் ஹேண்ட் பேக்குகள்!

Published By: Devika

27 Nov, 2022 | 12:27 PM
image

பெண்கள் எங்கு சென்­றாலும், கைப்­பையை எடுத்துச் செல்வது வழக்கமாக உள்ளது. பல வகைகளில் கைப்பைகள் தயாரிக்கப்படுகின்றன. கண்­ணைக் கவ­ரும் அழகுடன் இருக்கும் அவற்றை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், சில பிரச்சினைகளையும் எதிர்­கொள்ள நேரிடும். 

முதுகுத்தண்டு பாதிப்பு 

பெண்கள் தற்போது, பெரிய அளவி­லான கைப்பைகளைப் பயன்படுத்து­கின்­றனர். இதில், பல பொருட்களை வைத்­துக்கொண்டு தோளில் சுமந்து செல்கின்றனர். இதனால், தோள்­பட்டை பகுதிக்கான இரத்த ஓட்டம் பாதிக்கப்­படு­கிறது. மேலும், தோள்பட்டையில், கைப்பை மாட்டும் இடத்தில், அதிகம் அழுத்தம் ஏற்படும். இதன் காரணமாக, நரம்புகள் பாதிக்கும் வாய்ப்புள்ளது. இந்தப் பிரச்­சினை தோள், கழுத்து, முதுகுத்தண்டு, இடுப்பு என பரவலாம். 

உருவத்தில் மாற்றம் 

தோள்களுக்கு தொடர்ந்து அழுத்தம் தரும் வகையிலான ‘ஹேண்ட் பேக்’ மாட்­டும்போது, அதற்கேற்ப தோளின் ஒரு பக்கம் தாழ்வாகவும், மற்றொரு பக்கம் உயர்த்தி இருக்கும் வகையிலும் இயல்­பாக மாறும் நிலை ஏற்படும். இதனால், நாளடைவில் இரு தோள்களும் சமமாக இல்லாமல், ஒருபுறம் கீழாகவும், மறு­புறம் மேலாகவும் இருப்பது போல் தோற்ற­மளிக்கும். அதேபோல், முதுகில் அதிக எடையை சுமந்து செல்லும்போது, முதுகுத் தண்டுவடம் வளைந்து கூன் விழவும் வாய்ப்புள்ளது. இதைத் தவிர்ப்பதற்கு சில மாற்று வழிகளை பின்பற்றலாம். அவை:  

சுமைகளை எளிதாக்குதல் 

பையில், எந்த பொருட்களைக் கொண்டு செல்ல வேண்டும் என்பதை முன்­னரே தீர்மானிக்க வேண்டும். அதற்­கேற்ப, அவ­சியமான பொருட்களை மட்டும் ஹேண்ட் பேக்குகளில் எடுத்துச் செல்ல­லாம். செல்லும் இடத்தில், தேவையான பொருட்கள் மட்டும் வாங்க வேண்டும். இதனால், சுமைகளை எளிதாக்க முடியும். 

அடிக்கடி மாற்றுதல்

அதேபோல், ஹேண்ட் பேக்குகளில் அதிக எடை இருப்பதாக உணரும்­போது, அதை நீண்ட நேரம் ஒரே தோளில் சுமந்து செல்வதைத் தவிர்க்க வேண்டும். அரை மணி நேரத்துக்கு ஒரு முறை, பையை ஒவ்வொரு தோளிலும் மாற்ற­லாம். இதன் மூலம் தோளில் வலி ஏற்படுவதைத் தவிர்க்க முடியும். இல்லாவிடில், சிறிது நேரம் ஹேண்ட் பேக்கை கழற்றிக் கைகளில் பிடித்துக் கொள்­வதால், தோள் பகுதிக்கு ஓய்வு கொடுக்க முடி­யும். 

மைக்ரோ பைபருக்கு மாறுங்கள்  

பெண்கள் பலரும் தோல் ரக ஹேண்ட் பேக்குகளைத்தான் அதிகம் விரும்பு­கின்றனர். இது ஆரோக்கியமானது என்றாலும், இந்த வகை­யான பைக­ளின் எடை சற்று அதிக­­மாக இருக்கும். அதனுடன், நாம் கூடுத­லாகப் பொருட்கள் வைக்கும்­போது, எடை மேலும் அதிகரிக்கும். இதற்குப் பதிலாக, ‘மைக்ரோ பைபர்’ ரகப் பைகளைப் பயன்­படுத்­தும் போது, எடை குறைவாக இருக்கும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்