இத்தாலியில் மண்சரிவு : 8 பேர் உயிரிழப்பு; 13 பேரை காணவில்லை

By Digital Desk 2

27 Nov, 2022 | 12:27 PM
image

இத்தாலியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 8 பேர்  உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இத்தாலி இஷியா தீவில் உள்ள காசாமிச்சியோலா நகரில் கடந்த 2 தினங்களாக கடும்மழை பெய்து வருகின்றது.  இதன் காரணமாக நேற்று (நவ. 26) அங்கு  பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் வீடுகள் உட்பட பல கட்டிடங்கள் மண்ணோடு மண்ணாக புதைந்துள்ளதுடன் பெண்கள், சிறுவர்கள் உட்பட பலர் உயிரோடு புதைந்துள்ளனர்.

இதையடுத்து அங்கு உடனடியாக மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டன. பொலிஸார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் தீவிர மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். எனினும் 8 பேரை பிணமாகத்தான் மீட்டுள்ளனர்.

மேலும் ஒரு குழந்தை உட்பட 13 பேர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. எனினும் மாயமானவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பழனியில் அகற்றப்பட்ட தமிழ் இறையோன் முப்பாட்டன்...

2023-02-08 12:00:40
news-image

பூகம்பம் தாக்கிய பகுதிகளில் வசித்த நான்கு...

2023-02-08 12:03:57
news-image

துருக்கி பூகம்பத்தில் சிக்கிய பூனை மீட்பு

2023-02-08 12:18:12
news-image

துருக்கி, சிரியாவில் பூகம்பத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை...

2023-02-08 10:22:35
news-image

பூகம்பத்தைத் தொடர்ந்து துருக்கி துறைமுகத்தில் தீ

2023-02-08 09:32:08
news-image

பூகம்பம் - தொப்புள்கொடி துண்டிக்கப்படாத நிலையில்...

2023-02-08 06:11:56
news-image

வியட்நாம் யுத்தத்தில் தென் கொரிய படையினரின்...

2023-02-07 17:56:14
news-image

பூகம்ப இடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ள மக்கள் குரல்செய்திகளை...

2023-02-07 20:59:10
news-image

அதானிக்கு ஏற்ற விதத்தில் இந்தியாவின் வெளிவிவகார...

2023-02-07 16:22:30
news-image

அமெரிக்க லொத்தர் சீட்டிழுப்பில் 27,605 கோடி ...

2023-02-07 16:08:31
news-image

பூகம்பம் - 23 மில்லியனிற்கும் அதிகமானவர்கள்...

2023-02-07 15:46:00
news-image

பூகம்ப இடிபாடுகளில் இருந்து கால்பந்தாட்ட வீரர்...

2023-02-07 15:28:37