மாம்பழ புளிச்சேரி

Published By: Devika

27 Nov, 2022 | 12:11 PM
image

தேவையான பொருட்கள்

மாம்பழம் - 3

மஞ்சள் தூள் - ¼ மேசைக்கரண்டி

மிளகாய்த் தூள் - 1 மேசைக்கரண்டி

சீனி - 4 மேசைக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

தயிர் - 300 மி.லி.

தேங்காய் - ½ மூடி

சீரகம் - ½ மேசைக்கரண்டி

தேங்காய் எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

கடுகு, கறிவேப்பிலை - சிறிதளவு

காய்ந்த மிளகாய் - 3

செய்முறை

மாம்பழத்தை தோல் சீவி பெரிய துண்டுகளாக வெட்டி, அதில் இரண்டு டம்ளர் தண்ணீர், மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், உப்பு மற்றும் சீனி சேர்த்து நன்கு வேகவிடவும். 

தேங்காய், சீரகம், மஞ்சள் தூள் அனைத்தையும் ஒன்றாக மிக்சியில் மைய அரைத்துக் கொள்ளவும். இதனுடன் தயிரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இந்தக் கலவையை மாம்பழக் கூழுடன் சேர்த்து ஒரு கொதி விடவும். 

ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் சேர்த்து கடுகு, கறிவேப்பிலை மற்றும் மூன்று காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து மாம்பழ குழம்பில் சேர்க்கவும். இது சாதம், சப்பாத்திக்கு சுவையாக இருக்கும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்