ஆப்கானிஸ்தானுடனான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்தமை, 2023 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கு இலங்கை நேரடியாக தகுதி பெறுவதற்கான வாப்ப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
பல்லேகலையில் நேற்று முன்தினம் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் தசுன் ஷானக்க தலைமையிலான இலங்கை அணியை ஹஷ்மதுல்லாஹ் ஷஹீதி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி 60 ஓட்டங்களால் வென்றது.
இத் தொடரின் இரண்டாவது போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமையும் 3 ஆவது போட்டி எதிர்வரும் புதன்கிழமை (30) பல்லேகலையில் பகல் இரவு ஆட்டங்களாக நடைபெறவுள்ளன.
இத்தொடரானது, 2023 ஒருநாள் சர்வதேச உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டிக்கான, ஐசிசி கிரிக்கெட் உலகக் கிண்ண சுப்பர் லீக் தொடரின் ஓர் அங்கமாகவும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
2023 ஆண்டின் ஆண்கள் ஒருநாள் சர்வதேச உலகக் கிண்ணக் கிரிக்கெட் சுற்றுப்போட்டிக்கு வரவேற்பு நாடான இந்தியா மற்றும், சுப்பர் லீக் தொடரிலுள்ள 13 அணிகளில் முதல் 7 இடங்களைப் பெறும் அணிகளே நேரடியாக தெரிவுசெய்யப்படும்.
ஏனைய 5 அணிகளும் ஐசிசி இணை அங்கத்துவ அணிகளுடன் தகுதிகாண் சுற்றுப்போட்டியில் பங்குபற்ற வேண்டும். தகுதிகாண் போட்டிகளில் பங்குபற்றும் நாடுகளிலிருந்து 2 அணிகள் உலகக் கிண்ணத்துக்கு தெரிவாகும்.
2020 முதல் 2023 மே வரையான காலத்தில் உலகக் கிண்ண சுப்பர் லீக் சுற்று தொடர்களின் அங்கமாக இரு தரப்பு போட்டிகள் நடத்தப்படும். ஒவ்வொரு அணியும் ஏனைய அணிகளுடன் மொத்தம் 24 போட்டிகளில் (தலா 3 போட்டிகள் கொண்ட 8 தொடர்கள்) விளையாட வேண்டும்.
ஓவ்வொரு போட்டியின் வெற்றிக்கும் தலா 10 புள்ளிகள் வழங்கப்படும். ஆட்டம் கைவிடப்பட்டால் அல்லது வெற்றி தோல்வியின்றி போட்டி முடிவடைந்தால் தலா 5 புள்ளிகள் வழங்கப்படும்.
இந்நிலையில், இலங்கை அணி இதுவரை 19 போட்டிகளில் விளையாடி நிலையில் 62 புள்ளிகளுடன் 10 ஆவது இடத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தான் 13 போட்டிகளே விளையாடிய நிலையில் 110 புள்ளிகளுடன் 7 ஆவது இடத்தில் உள்ளது.
உலகக் கிண்ணவரவேற்பு நாடான இந்தியா 19 போட்டிகளில் 129 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.
இங்கிலாந்து 2 ஆவது இடத்திலும், அவுஸ்திரேலியா 3 ஆவது இடத்திலும், நியூ ஸிலாந்து 4 ஆவது இடத்திலும், பங்களாதேஷ் 5 ஆவது இடத்திலும், பாகிஸ்தான் 6 ஆவது இடத்திலும் உள்ளன. மேற்கிந்தியத் தீவுகள் 24 போட்டிகளில் விளைடியாடி 88 புள்ளிகளுடன் 8 ஆவது இடத்தில் உள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM