குருதிநெல்லியின் மருத்துவ குணங்கள்

By Devika

27 Nov, 2022 | 12:03 PM
image

குருதிநெல்லி என தமிழில் அழைக்கப்படும் க்ரான்பெர்ரி பழம் புளிப்புச் சுவை கொண்டது. இதனால் மிகச் சிலரே இந்த பழத்தை சாப்பிட விரும்புகிறார்கள். 

ஊறுகாய், சட்னி, பழ ஜூஸ் தயா­ரிப்பி­லும் பயன்படுத்தப்படுகிறது. கோடை காலத்தில் அதிகமாக விளை­யும் இந்த பழம், சுவையில் குறைபாடு கொண்டிருந்தாலும் ஆரோக்கியத்தில் சிறந்து விளங்குகிறது. 

க்ரான்பெர்ரியை உட்கொள்வதன் மூலம், வயிறு ஆரோக்கியமாக இருக்கும். மலச்சிக்கல், வாயுத்­தொல்லை, அசி­டிட்டி போன்ற பிரச்­சினைகளில் இருந்து விடு­விக்கும். வயிற்றுபோக்கு போன்ற பிரச்சினையை நீக்கி, குடலை ஆரோக்­­கியமாக வைத்திருக்க உதவும். 

க்ரான்பெர்ரி சாப்பிடுவது ஆரோக்­கியத்துக்கு வரப்பிரசாதமாக அமையும். முக்கியமாக இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். பிற நோய்களின் வீரியத்தை குறைக்கவும் செய்யும். 

இதில் இரும்புச்சத்து உள்ளது. அது உடலில் ஏற்படும் இரத்த பற்­றாக்குறையை ஈடுசெய்யும் தன்மை­யும் கொண்டது. மேலும் குருதி நெல்லியில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. அதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நீண்ட நேரம் சோர்­வின்றி செயல்பட முடியும். 

உடல் எடையை குறைக்கவும் இது பயனுள்ளதாக இருக்கும். இதனை உட்கொள்வது கொலஸ்ட்ரோல் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவும். இதயம் தொடர்பான பிரச்சினைகளில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவும். 

இது தவிர உயர் இரத்த அழுத்­தத்தை கட்டுப்படுத்தும். இதற்காகவே க்ரான்பெர்ரியை தினமும் சாப்பிட வேண்டும். ஊறுகாய் வடிவில் கூட உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அம்ப்ளிக்கல் கிரானுலோமா எனப்படும் தொப்புள் கட்டி...

2023-02-07 15:36:13
news-image

குடல் எரிச்சல் பாதிப்பை ஃபுட்மாப் (FODMAP)...

2023-02-06 13:47:17
news-image

அயோட்டிக் டிஸெக்ஷன் எனப்படும் இதய தமனி...

2023-02-04 13:31:54
news-image

மூளை கட்டி பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2023-02-02 16:56:07
news-image

பிரபலமடைந்து வரும் யெயர்த்திங் தெரபி

2023-02-01 17:35:35
news-image

குழந்தைகளுக்கு குறட்டை வருவது ஏன்?

2023-02-01 11:51:33
news-image

இளம் பெண்களை அதிகம் பாதிக்கும் ஹீமோகுளோபின்...

2023-02-01 11:09:27
news-image

ஸ்கின் கிராப்டிங் எனப்படும் தோல் பொறுத்தும்...

2023-01-31 16:23:50
news-image

குழந்தைகளுக்கு ஏற்ற தேங்காய் எண்ணெய் தயாரிப்பு

2023-01-30 12:35:06
news-image

ஸ்லீப் பரலைஸ் எனும் உறக்க பக்கவாதப்...

2023-01-30 11:30:54
news-image

இதயத்துடிப்பு சீராக இயங்குவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் நவீன...

2023-01-28 13:21:14
news-image

அதிகாலை நடைப்பயிற்சி நல்லதல்ல!

2023-01-27 18:27:50