முல்லைத்தீவில் மாவீரர்நாள் நினைவேந்தலுக்கு இடையூறு : நினைவு வளைவுகளை உடைத்தெறிந்து அட்டகாசம்!

Published By: Vishnu

27 Nov, 2022 | 11:06 AM
image

கே .குமணன் 

மாவீரர் நாள் நினைவு நிகழ்வுகள் இன்று (27) மாலை இடம்பெறவுள்ள நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சில துயிலும் இல்லங்களுக்கு சென்றவர்கள் ஏற்பாட்டாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதோடு நினைவு வளைவுகளையும் கொடிகளையும் அறுத்தெறிந்து அட்டாகாசம் புரிந்துள்ள சம்பவங்கள் பதிவாகியுள்ளது.

முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் ஏற்பாடுகளை செய்துகொண்டு மக்கள் நின்றவேளை அவ்விடத்துக்கு வருகை தந்த பொலிஸார் நுழைவாயில் வளைவு மற்றும் கொடிகள் என்பனவற்றை அறுத்தெறிந்து அட்டகாசம் புரிந்துள்ளதோடு கைதுப்பாக்கியையும்  எடுத்து ஏற்பாடுகளை செய்தவர்களை சுடுவோம் எனவும் அச்சுறுத்தியுள்ளனர் மேலும் அனைத்து பொருட்களையும் ஏற்றி சென்றுள்ளனர்.

அத்தோடு அளம்பில் மாவீரர் துயிலும் இல்லத்துக்கு நேற்று (26) இரவு சென்ற பொலிஸார் வாயிலில் கட்டியிருந்த பதாதைகளை கழற்டிச் சென்றுள்ளதோடு எற்பாடுகளை செய்தவர்களை பயங்கரவாத தடை சட்டத்தில் கைது செய்வோம் எனவும் முல்லைத்தீவு பொலிஸ் பொறுப்பதிகாரி அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

முள்ளிவாய்க்கால், மற்றும் முல்லைத்தீவு நகர கடற்கரை துயிலும் இல்லங்களுக்கு சென்ற முல்லைத்தீவு பொலிஸார் நினைவு நிகழ்வில் மாவீரர் நாள் என எழுதிய பதாதையோ நினைவு வளைவோ அல்லது பாடல்களோ ஒலிபரப்பினால் கைது செய்வோம் எனவும் அச்சுறுத்தியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-03-22 06:14:23
news-image

யாழில் நண்பர்களுடன் கடலில் குளிக்க சென்ற...

2025-03-22 05:04:39
news-image

சர்வதேச பல்கலைக்கழகங்களை நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை...

2025-03-22 04:49:45
news-image

அரசாங்கம் விடுவித்த 323கொள்கலன்களும் யாருக்கு சொந்தமானவை;...

2025-03-22 04:45:51
news-image

யாழ்.நூல் எரிப்பு தொடர்பில் குழு அமைத்து...

2025-03-22 04:43:41
news-image

நாடளாவிய ரீதியில் 400க்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள்...

2025-03-22 04:39:00
news-image

நிவாரண பொதியில் உள்ளடங்குவது சமபோசாவா அல்லது...

2025-03-22 04:34:24
news-image

வட,கிழக்கின் தேவைகளை கண்டறிந்தே நிதியொதுக்கீட்டைச் செய்ய...

2025-03-22 04:27:18
news-image

மே மாதத்தில் 8,9ஆம் திகதிகளில் மாத்திரம்...

2025-03-22 04:24:35
news-image

மீண்டும் ஐ.தே.க. ஆட்சியமைப்பதற்காக தீவிரமாக செயற்படுகின்றோம்...

2025-03-22 04:15:02
news-image

பேருந்து நடத்துனர் - லண்டன் பெண்ணுக்கு...

2025-03-22 04:10:32
news-image

பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலிப பீரிஸுக்கு...

2025-03-21 21:25:13