(லோகன் பரமசாமி)
உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் அண்மைக்கால நகர்வுகள் சர்வதேச அரங்கில் புதியதொரு பரிமாணத்தை அடைந்து வருகிறன. சுதந்திரம் அடைந்து 75ஆண்டுகள் பூர்த்தியாகி விட்ட நிலையில் இந்தியா பல்வேறு துறைகளிலும் வளர்ச்சி கண்டுவருகின்றது.
பல வருடங்களாக மிகுந்த ஆர்வத்துடன் காந்திருந்த இந்தியா ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச்சபையில் நிரந்தர அங்கத்தவராக விரைவில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் இடம்பெறும் பிராதான மாற்றங்களில் நிரந்தர அங்கத்துவ நாடுகளின் தொகையை அதிகரிப்பதுடன் இருவருடங்களுக்கு ஒருமுறை மாற்றப்படும் தற்காலிக அங்கத்தவர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்கும் நகர்வுகள் இடம்பெறுகின்றன.
இவ்வருடம் பெப்ரவரி மாதத்தில் ரஷ்யாவின் உக்ரேன் மீதான படையெடுப்புடன் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையை சீரமைப்பது குறித்த நகர்வுகள் தீவிரமாக ஆரம்பமாயின. தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி உக்ரேனின் நிலைப்பாடுகளைப் பாதுகாப்புசபை விவாதங்களில் இருந்து ரஷ்யா தவிர்த்துக்கொண்டதாக ஏற்கனவே குற்றசாட்டுகள் உள்ளன.
இதனால் ஆசிய,ஆபிரிக்க, இலத்தீன் அமெரிக்க நாடுகள் பல மிகுந்த ஆர்வத்தடன் தம்மையும் பாதுகாப்புச் சபையின் நிரந்தர அங்கத்தவராக இணைத்த கொள்வதற்கு முன்வந்திருந்தன. இந்த நகர்வுகளுக்கு முக்கிய காரணம் ஐக்கிய நாடுகள் சபைக்கு வெளியே பல உறுதியான அமைப்பகள் சீன,ரஷ்ய ஒத்துழைப்பில் உருவாகி வருவதை தவிர்ப்பதே மறைமுக நோக்கமாக இருக்கிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் அதியுச்ச சக்தி வாய்ந்ததொரு அங்கமே பாதுகாப்புச் சபையாகும். இதன் அடிப்படைச் சாசனமாக சர்வதேச அரங்கில் பாதுகாப்பையும் சமாதானத்தையும் நிலைநாட்டுதல் என்ற விடயம் காணப்படுகின்றது. இந்தப்பொறுப்பை நிலைநாட்டும் வகையில் நாடுகள் மத்தியில் இடம்பெறும் சர்ச்சைகளைத் தீர்க்கும் நோக்கத்திலான தலையீடுகளைச் செய்வதற்கு குறித்த சாசனம் இடமளிக்கிறது.
இந்தத் தலையீடுகள் சர்ச்சைகள் மீதான விசாரனைகளை ஆரம்பிப்பதற்கும், பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வுகளை காண்பதற்கும் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கான கண்காணிப்பைச் செய்வதற்கும், மத்தியஸ்தம் செய்வதற்கும் அமைதியை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் இடமளிக்கிறது.
சர்வதேச பாதுகாப்பிற்கும் சமாதானத்திற்கும் பாதிப்பு விளைவிக்கக்கூடிய சிக்கல்களை எடுத்தாளும் அதிகாரத்தை பாதுகாப்புச்சபை கொண்டுள்ளது. இந்த அதிகாரம் நாடுகள் மீது வியாபார தடை உத்தரவைப் பிறப்பிக்கும் அதிகாரங்களையும் கொண்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் கொண்ட நாடுகள் பாதுகாப்புச் சபையின் முடிவை ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டிய நிலையிலுமம் உள்ளது.
இந்த விவகாரத்தில் ரஷ்யா, ஈரான், வட கொரியா, சிரியா போன்ற நாடுகள் சமாதானமும் பாதுகாப்பும் பக்கசார்பானதாக உள்ளது என்ற குற்றச்சாட்டை முன் வைக்கிண்றன என்பதையும் தவிர்த்து விடலாகாது.
ஆரம்பத்தில் சீனக் குடியரசு, பிரான்ஸ், சோவியத் சோசலிச குடியரசு, ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா ஆகியன பாதுகாப்புச் சபையின் நிரந்தரமான அங்கத்தவர்களாக இருந்தன. காலப்போக்கில் சீன குடியரசு, மக்கள் சீனக் குடியரசாக மாறி ஆட்சிமுறையிலும் மாற்றம் கண்டது.
அதேபோல கம்யூனிச ஆட்சி முறையைக் கொண்ட சோவித்தின் வீழ்ச்சியின் பின்பு உலகின் பெரிய நிலப்பரப்பை கொண்டா நாடான ரஷ்யா தொடர்ந்து தனது அங்கத்துவத்தை கொண்டிருந்தது.
தற்பொழுது பாதுகாப்பு சபையின் விரிவாக்கத்தில் பிரேசில், ஜேர்மன், இந்தியா , ஜப்பான் , கென்யா , மெக்சிகோ , நைஜீரியா , தென் ஆபிரிக்கா போன்ற நாடுகள் இணைந்து கொள்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளன.
ஆனால் ஜி-4 என்று தற்பொழுத அழைக்கப்படும் பிரேசில், ஜேர்மன் இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.
இத்தாலி, ஜேர்மனிய பிரதிநித்துவத்திற்கு எதிராகவும், ஆர்ஜன்ரீனா பிரேசில் பிரதிநித்துவத்திற்கு எதிராகவும் போட்டியிட்ட அதேவேளை ஆபிரிக்க யூனியன் நாடுகளும் சவாலாக இருந்தன. ஆனால் கூட்டுப்பரிந்துரை அடிப்படையில் ஜி-4 நாடுகள் உட்பட வீட்டோ அதிகாரம் கொண்ட ஆறு நாடுகள் இணைத்துக் கொள்ளப்படலாம் என்ற கருத்துக்களும் உள்ளன.
இந்த சர்வதேச நகர்வுகளுக்கு மத்தியில் இந்தியா, பாதுகாப்புச் சபையில் நிரந்தர அங்கத்துவம் பெறுவதானது, தெற்காசிய நாடுகளில் பெரும் தாக்கத்தை விளைவிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவை பாதுகாப்புச் சபையில் சேர்த்துக் கொள்வது குறித்த விவாதத்தில் ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தானிய பிரதிநிதி எடுத்துக் கொண்டதையிட்டு, இந்தியப் பிரதிநிதி கடுமையான பதில்களை கொடுத்திருந்தார்.
ஜம்மு-காஷ்மீர் பிராந்தியம் இந்தியாவிருந்து பிரிக்கமுடியாதவொரு பகுதியாக இருக்கிறது. ஆகவே அதனைத் தனிமைபப்டுத்த முடியாது என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
புதுடில்லி தன்னையொரு சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த தரப்பாகத் தரமுயுயர்த்திக் கொள்வதில் முழுமூச்சுடன் நகர்ந்து வருகிறது. இந்த நிலையில் இதர தெற்காசிய நாடுகள் அமைதியாக காத்திருக்கின்றன. அவ்வாறான நிலையில், பாகிஸ்தான் தரப்பு மட்டுமே தனது எதிப்பை வெளிபடுத்தி வருகிறது.
அதேவேளை பாதுகாப்புச்சபை அங்கத்தவராக இந்தியா உறுதிப்படுத்தப்படும் பொழுது தனது பிராந்தியத்தின் பாதுகாப்பையும் அமைதியையும் குறித்து பதில் கூற வேண்டிய நிலைக்கு இந்தியா நகர்த்தப்படுகிறது. இதன்மூலம் தெற்காசிய பிராந்தியத்தில் எழும் அரசில் நிலைமைகளுக்கு பதில்கூறும் அலகாக இந்தியா மாறுவதுடன் சவாலாக உள்ள அரசுகளின் செயற்பாடுகளை பாதுகாப்பு சபை சாசனங்களுக்கு இணங்க கண்காணிக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது என்பதையும் இங்கே மறந்து விடலாகாது.
இந்தியாவை பாதுகாப்புச் சபையில் சேர்ப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்ட போதிலும் இந்தியாவின் மீதான மேலை நாடுகள் பார்வையில் அண்மைகாலத்தில் பல மாறுபட்ட கருத்துக்களை காணக்கூடியதாக உள்ளது.
இந்தியா மீது அதிக அழுத்தங்களை பிரையோகிக்கத் தக்க வகையிலான பார்வையே மேலை நாடுகளில் செல்வாக்குமிக்க சிந்தனை குழுக்களின் பார்வையாக உள்ளது. அதேபோல புதிய அமைப்பகளில் இந்தியாவை தவிர்த்துவிடும் போக்கையும் மேலை நாடுகள் கடைப்பிடிக்கின்றன.
கொரோனா தொற்று பலமாக தாக்கிய போதிலும் சீனா வளர்ச்சி கண்டிருக்கின்றது. ஆனால், இந்தியாவினால் வளர்ச்சி காண முடியவில்லை, இந்தியாவில் வறுமை இன்னமும் சவாலான ஒன்றாகவே உள்ளது. அது, போதுமான அளவு வேலைவாய்புக்களை ஏற்படுத்துவதில் நீண்ட காலத்திற்கு பின்தங்கிவிட்டுள்ள நிலையொன்று இந்தியாவில் உள்ளது.
மேலும் ஜனநாயகப் பண்புகளை அதிகாரத்துவத்தினாலும் துருவமயப் படுத்தப்பட்ட நிலையினாலும் உள்நாட்டு அரசியலில் எச்சரிக்கையுடன் பேணப்பட வேண்டியுள்ளது. அதேவேளை பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளுடன் ஏற்பட்டுள்ள போட்டிநிலை காரணமாக சர்வதேச உறவுகளில் கட்டுப்பாடுகளை கொண்டதாக அமைந்திருக்கிறது.
குறிப்பாக இலங்கை போன்ற நாடுகளில், சீன நகர்வுகள் காரணமாக இந்திய தனது பிராந்திய முக்கியத்துவத்தை இழந்து வரும்நிலை காணப்படுகிறது போன்ற கருத்துக்கள் மேலை நாட்டு ஆய்வாளர்கள் மத்தியில் உள்ளது.
அதேவேளை இந்தோ-பசுபிக் பிராந்தியத்தை மையமாகக் கொண்ட புதிய நாற்கர நாடுகளின் கூட்டு உருவாகும் நிலை சர்வதேச அரங்கில் தோன்றியுள்ளது. இந்த நாற்கர நாடுகள் கூட்டில் இந்தியா தவிர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்தக் கூட்டில் அவுஸ்திரேலியா, பிரித்தானியா, யப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன.
ஏற்கனவே 2021ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அவுஸ்திரேலியா, பிரித்தானியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து உருவாக்கிய ‘ஆக்கஸ்’ என்ற அமைப்பை இந்தோ-பசுபிக் தாராள ஜனநாயக நாடுகளின் கூட்டு என்ற வகையில் புதிதாகவொரு நாற்கர நாடுகளின் கூட்டு உருவாக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
ஆக, இந்தியா ஒருபுறத்தில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் இணைத்து கொள்பட்டாலும் மறுபுறத்தில் சர்வதேச அரசியலின் உள்ளக பாகுபாடுகளும் கூட்டு நலன்கள் சார்ந்த ஒற்றுமைகளும் எப்பொழுதும் இருந்த வண்ணமே உள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM