பாகிஸ்தான்  உயர்ஸ்தானிகருக்கு வடக்கு மக்கள் மீது திடீர் கரிசனை ஏன் ? - சிவசக்தி ஆனந்தன் கேள்வி

By Digital Desk 2

27 Nov, 2022 | 08:56 AM
image

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) உமர் உமர் பாரூக் பர்கிக்கு வடக்கு தமிழ் மக்கள் மீது திடீரென கரிசனை வருவதற்கு காரணம் என்ன என்று ழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அண்மையில் வடக்கிற்கான பயணமொன்றை பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) உமர் பாரூக் பர்கி மேற்கொண்டிருந்த நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிவிப்பில்,

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர், வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டு புலமைப்பரிசில் திட்டங்களுக்கான அழைப்பினை விடுத்ததோடுரூபவ் தமிழ் மக்கள் மீதும் தமக்கு கரிசனைகள் இருப்பது போன்றதொரு தோற்றப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

உண்மையில் வடக்கிற்கான இவரது மூன்று நாட்கள் திடீர் பயணம் பல்வேறு திரைமறைவு நிகழ்ச்சி நிரல்களைக் கொண்டிருக்கலாம் என்ற கரிசனைகள் எமக்குள்ளன.

குறிப்பாக, வடக்கை மையப்படுத்தி இராஜதந்திர முரண்பாடுகளை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு முனைகின்றாரா என்ற சந்தேகங்களும் உள்ளன.

அதேநேரம், வடக்கு தமிழ் மக்கள் மீது கரிசனைகளைக் கொண்டவராக தன்னைக் காண்பிக்க விளைந்துள்ளார். அவ்வாறு தமிழ் மக்கள் மீது கரிசனை கொள்பவராக இருப்பாராயின் நீதிக்காக போராடும் அந்த மக்களுக்காக ஐ.நா.வில் இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவளித்து வாக்களிப்பதை தவிர்த்திருக்க வேண்டும்.

அதற்கும் முன்னதாக தமிழ் மக்கள் இன்று நீதிக்காக போராடுவதற்கு காரணமாக இருக்கும் இலங்கை இராணுவத்திற்கு போரியல் ஆயுதங்களை அள்ளி வழங்கி கண்மூடித்தனமான அப்பட்டமான மனித உரிமைகளை மீறிய போருக்கு காரணமாக இருந்திருக்க கூடாது.

இவ்வாறு தமிழ் மக்களுக்கு எதிரான அனைத்துச் செயற்பாடுகளையும் முன்னெடுத்ததன் பின்னர் வடக்கு மக்கள் மீது கரிசனை கொள்வதென்பது வேடிக்கையான விடயமாக உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விமல், டலஸ், பீரிஸ் அணியினருக்கு எதிராக...

2023-02-02 12:49:22
news-image

தேர்தல் செலவுகளுக்கு கட்டுப்பணம் பயன்படுத்தப்படுகிறதா ?...

2023-02-02 15:25:08
news-image

இலங்கை வருகிறார் நேபாள வெளிவிவகார அமைச்சர்

2023-02-02 15:42:37
news-image

காணாமல்போன வெல்லம்பிட்டி கோடீஸ்வர வர்த்தகர் நிர்வாணத்துடன்...

2023-02-02 17:03:36
news-image

26 உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் பொலிஸ்...

2023-02-02 16:23:13
news-image

கட்சிக்குள் பிளவை ஏற்படுத்துவோர் மக்களையும் பிளவுபடுத்தி...

2023-02-02 16:59:48
news-image

கம்பளை - நாவலப்பிட்டி பிரதான வீதியில்...

2023-02-02 16:57:03
news-image

75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு...

2023-02-02 15:34:04
news-image

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தாலுக்கு அழைப்பு

2023-02-02 16:53:42
news-image

இலங்கை தொடர்பில் சர்வதேச நாணயநிதியத்திற்கு உத்தரவாதங்களை...

2023-02-02 15:56:36
news-image

கடவுளிடமே மன்னிப்புக் கோரினேன்; கத்தோலிக்க தேவாலயத்திடம்...

2023-02-02 15:45:01
news-image

மட்டக்களப்பு நீதிமன்றத்திலிருந்து கைதி தப்பியோட்டம்

2023-02-02 16:12:51