உலக அமைதிக்காக வட கொரியாவுடன் இணைந்து செயற்பட சீனா தயார் : சீன ஜனாதிபதி

By Sethu

26 Nov, 2022 | 06:40 PM
image

உலக அமைதிக்காக வட கொரியாவுடன் இணைந்து செயற்பட சீனா தயார் என சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங் கூறியுள்ளார் என வட கொரியாவின் கொரிய மத்திய செய்திச் சேவை இன்று தெரிவித்துள்ளது.

 சீன ஜனாதிபதியின் 3ஆவது பதவிக்காலத்துக்கு ஸீ ஜின்பிங் தெரிவுசெய்யப்பட்டமைக்கு வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் அனுப்பிய வாழ்த்துச் செய்திக்கு அனுப்பிய பதிலில சீன ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

'பிராந்தியத்தினதும் உலகினதும் அமைதி, ஸ்திரத்தன்மை, அபிவிருத்தி மற்றும் சுபீட்சத்துக்காக வடகொரியாவுடன் இணைந்து செயற்பட சீனா தயாராகவுள்ளது' சீன ஜனாதிபதி தெரிவித்தார் என கொரிய மத்திய செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணை உட்பட நீண்ட தூரஏவுகணைகள் பலவற்றை வட கொரியா பரிசீலித்து சில நாட்களில் சீன ஜனாதிபதியின் இச்செய்தி வெளியாகியுள்ளது.

இறுதியாக 2017 ஆம் ஆண்டில் தனது 6 ஆவது அணுவாயுத பரிசோதனையை வடகொரியா நடத்தியது. அண்மைய நாட்களில் பெரும் எண்ணிக்கையான ஏவுகணைகளை வடகொரியா பரிசோதித்த நிலையில், தனது 7 ஆவது அணுவாயுத சோதனையையும் வடகொரியா நடத்தக்கூடும் என்ற அச்சமும் அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பழனியில் அகற்றப்பட்ட தமிழ் இறையோன் முப்பாட்டன்...

2023-02-08 12:00:40
news-image

பூகம்பம் தாக்கிய பகுதிகளில் வசித்த நான்கு...

2023-02-08 12:03:57
news-image

துருக்கி பூகம்பத்தில் சிக்கிய பூனை மீட்பு

2023-02-08 12:18:12
news-image

துருக்கி, சிரியாவில் பூகம்பத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை...

2023-02-08 10:22:35
news-image

பூகம்பத்தைத் தொடர்ந்து துருக்கி துறைமுகத்தில் தீ

2023-02-08 09:32:08
news-image

துருக்கி நாட்டுக்காக வேலைவாய்ப்பு நேர்முகப் பரீட்சை...

2023-02-08 09:18:08
news-image

பூகம்பம் - தொப்புள்கொடி துண்டிக்கப்படாத நிலையில்...

2023-02-08 06:11:56
news-image

வியட்நாம் யுத்தத்தில் தென் கொரிய படையினரின்...

2023-02-07 17:56:14
news-image

பூகம்ப இடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ள மக்கள் குரல்செய்திகளை...

2023-02-07 20:59:10
news-image

அதானிக்கு ஏற்ற விதத்தில் இந்தியாவின் வெளிவிவகார...

2023-02-07 16:22:30
news-image

அமெரிக்க லொத்தர் சீட்டிழுப்பில் 27,605 கோடி ...

2023-02-07 16:08:31
news-image

பூகம்பம் - 23 மில்லியனிற்கும் அதிகமானவர்கள்...

2023-02-07 15:46:00