வடிவேலு நடித்த 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' வெளியீட்டுத் திகதி அறிவிப்பு

By Nanthini

26 Nov, 2022 | 05:20 PM
image

சிறு இடைவெளிக்குப் பிறகு வைகைப்புயல் வடிவேலு கதாநாயகனாக நடித்திருக்கும் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' படத்தின் வெளியீட்டுத் திகதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி கொமர்ஷல் இயக்குநரான சுராஜ் இயக்கத்தில் தயாராகும் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' படத்தில் வடிவேலு முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிகை சிவாங்கி கிருஷ்ணகுமார் நடித்திருக்கிறார். 

இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, புகழ், முனிஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். 

முழு நீள நகைச்சுவை படமாக தயாராகியிருக்கும் இந்த படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது.

அண்மையில் இப்படத்தில் இடம்பெற்ற சிங்கிள் ட்ராக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

அந்த வகையில் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' டிசம்பர் மாதம் 9ஆம் திகதி பட மாளிகையில் வெளியாகும் என அறிவிப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

வடிவேலு கதாநாயகனாக நடித்திருப்பதால், ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பை 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' உருவாக்கிவிட்டிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right