தமிழ் சினிமாவின் பழம்பெரும் பின்னணிப் பாடகி எல்.ஆர்.ஈஸ்வரியின் 65 வருட இசைப்பயணத்தை கெளரவிக்கும் விதமாக பாராட்டு விழா - திரையிசை விருந்து நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு சிவ ஸ்ரீ டாக்டர். சாம்பசிவ மணிக்குருக்களின் ஒருங்கமைப்பில் எதிர்வரும் டிசம்பர் 4ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி தொடக்கம் இரவு 9.30 மணி வரை சென்னையில் உள்ள சர்.பிட்டி தியாகராஜா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
தமிழகத்தின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையிலான இந்த நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக இசையமைப்பாளர்களான சங்கர் கணேஷ், தினா, T.L. மஹாராஜன், நடிகர்களான Y.G. மகேந்திரன், டெல்லி கணேஷ், பாண்டியராஜன் மற்றும் கலைமாமணி V.K.T. பாலன் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
அத்தோடு சிறப்பு விருந்தினர்களாக பழம்பெரும் நடிகைகளான கே.ஆர்.விஜயா, காஞ்சனா, சச்சு, வெண்ணிற ஆடை நிர்மலா, சிஐடி சகுந்தலா, வடிவுக்கரசி, பாடகி அம்ருதா, பாடகர்களான T.L.தியாகராஜன், கானா உலகநாதன், வேல்முருகன், முகேஷ், செந்தில் தாஸ் மற்றும், ஜெயந்தி கண்ணப்பன், இராஜேந்திரன், குரு, டைமன் பாபு ஆகியோர் நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர்.
இதன்போது கலைத்துறையை சேர்ந்த பலர் பாராட்டு பெறவுள்ளனர்.
ஸ்ட்ரிங்ஸ் குழுவினரின் இசைப் பங்களிப்பில் அரங்கம் நிறைந்த இசை விருந்தை கண்டுகளிக்க அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM