ஆசிரியர்களுக்கு சீருடைக்கான கொடுப்பனவு திட்டமொன்றை ஆரம்பிக்க வேண்டும் -  ரோஹினி கவிரத்ன

Published By: Nanthini

26 Nov, 2022 | 06:26 PM
image

(இராஜதுரை ஹஷான், எம்.ஆர்.எம். வசீம்)

சிரியர்களுக்கு சீருடைக்கான கொடுப்பனவு திட்டமொன்றை ஆரம்பிக்க வேண்டும். 

பாடசாலைக்கு வருகை தரும் மாணவர்களின் தந்தையருடன் செல்வதற்காக ஆசிரியர்கள் இலகு ஆடையை கோருகிறார்கள் என அரசாங்கத்துக்கு சார்பான ஒருவர் கீழ்த்தரமான முறையில் குறிப்பிட்டுள்ளமை, ஒட்டுமொத்த ஆசிரியர்களையும் அவமதிப்பதாக கருதப்படுகிறது. 

ஆகவே, இவ்விடயம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன கல்வி அமைச்சரிடம் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் இன்று சனிக்கிழமை (நவ 26) நடைபெற்ற 2023ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்டத்தின் பொதுநிருவாக, உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தின்போதே அவர் இவ்வாறு கோரிக்கையை முன்வைத்தார்.

அவர் மேலும் கூறியதாவது,

மாணவர்களுக்கு சீருடை இருப்பதை போன்று ஆசிரியர்களுக்கு சீருடை கிடையாது. ஆனால், ஆசிரியர்கள் சேலையை சம்பிரதாயபூர்வமாக அணிகின்றனர். 

நான் ஆசிரியராக இருந்தால் சேலையையே அணிவேன். ஆனால், கீழ்த்தரமான நபரொருவர், 'ஆசிரியைகள் சேலைக்கு பதிலாக வேறு உடையை அணிய அனுமதி கோருவது பாடசாலைக்கு வரும் மாணவர்களின் தந்தையர்களுடன் செல்வதற்கு இலகுவானதாக இருப்பதற்காகவே' என்று குறிப்பிட்டுள்ளார். 

இது அனைத்து ஆசிரியர்களையும் அவமதிக்கும் வகையிலேயே அமைந்துள்ளது. இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேவேளை பொருளாதார ரீதியில் ஆசிரியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்றையவர்களுக்கு வழங்கப்படுவதை போன்று ஆசிரியர்களுக்கும் சீருடைக்கான கொடுப்பனவொன்றை வழங்குமாறு கோரிக்கை விடுக்கின்றேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எமது பேச்சுவார்த்தைகள் ஒரு கட்சியுடன் வரையறுக்கப்பட்டவையல்ல...

2025-02-14 15:44:00
news-image

யு.எஸ்.எய்ட்டின் இலங்கைக்கான நிதியுதவி விவகாரம் தொடர்பில்...

2025-02-14 15:24:54
news-image

உள்ளூராட்சி மன்ற சட்டமூலம் தொடர்பில் சட்டமா...

2025-02-14 13:06:40
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் நான்கு இராணுவ அதிகாரிகள்...

2025-02-14 20:36:10
news-image

ரணில் - மைத்திரி தலைமையில் எதிர்கால...

2025-02-14 15:55:25
news-image

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்த...

2025-02-14 19:51:16
news-image

மாலம்பேயில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது...

2025-02-14 19:07:56
news-image

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை சபாநாயகர் சபைக்கு அறிவிக்கும்...

2025-02-14 14:14:28
news-image

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள்...

2025-02-14 19:06:18
news-image

வற் வரியை நீக்குமாறும் மீன்பிடியை ஊக்குவிக்குமாறும்...

2025-02-14 17:29:15
news-image

இணையத்தளம் மூலம் 29 இலட்சம் ரூபா...

2025-02-14 19:03:13
news-image

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் மக்கள் அரசாங்கத்துக்கு சிறந்த...

2025-02-14 16:51:12