மாகாண சபை தேர்தல் முறையிலுள்ள சட்டசிக்கலுக்கு தீர்வுகாண அவதானம் செலுத்தப்பட்டுள்ளது - பிரதமர்

Published By: Digital Desk 5

26 Nov, 2022 | 01:50 PM
image

(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்)

நல்லாட்சி அரசாங்கத்தில் மாகாண சபை தேர்தல் தொடர்பான அறிக்கையை விடயதானத்திற்கு பொறுப்பான அமைச்சர் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அவர் அதற்கு எதிராக வாக்களித்தமை நகைப்புக்குரியது.

இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் இவ்வாறான சம்பவம் முன்னொருபோதும் பதிவாகவில்லை என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தில் 154 ஆவது அத்தியாயத்தின் (டி) பிரிவில் 'மாகாண சபை தேர்தல் நடத்தப்படாத பட்சத்தில் குறித்த மாகாணத்தின் மாவட்ட உறுப்பினர்களை ஒன்றிணைத்து பாராளுமன்ற சபை என்ற அடிப்படையில் குறித்த மாகாணத்தின் பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வு குறித்து ஆராயலாம் ' என குறிப்பிடப்பட்டுள்ளதற்கு அமைய செயற்பட தயாராயின் அது குறித்து அவதானம் செலுத்தலாம் எனவும் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (26) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பொதுநிர்வாக,உள்நாட்டலுவல்கள்,மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி,விளையாட்டுத்துறை, இளைஞர் விவகாரத்துறை அமைச்சு ஆகியவற்றிற்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

அரச நிர்வாகம் இலங்கையின் முதலாவது அமைச்சாகும். சோல்பரி அரசியலமைப்பில் அரச சேவைக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.

கால பரிமாற்றத்திற்கமைய அரச சேவை நாட்டுக்கு முக்கியமானது என்ற தீர்மானம் கொள்கை ரீதியில் எடுக்கப்பட்டது. அரசியலமைப்பின் முதலாம் மற்றும் இரண்டாம் குடியரசு யாப்பில் அரச சேவை தொடர்பில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இரண்டாம் குடியரசு யாப்பு 21 முறை சீர்த்திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் பாராளுமன்றத்தை பிரதான கேந்திரமாக கொண்டு அரச சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அரச சேவை வினைத்திறகாகவும், இலகுவானதாகவும் காணப்பட வேண்டும் என்பது நாட்டு மக்களின் பிரதான எதிர்பார்ப்பாக உள்ளது.

அரசியலமைப்பின் 13 ஆவது 9 மாகாண சபைகள் நாட்டின் அதிபதியாக உள்ளன. மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் மாகாண சபைகளுக்கான நிதி பாராளுமன்றத்தின் ஊடாக வழங்கப்பட்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் பிரதிநிதியால் மாகாண சபைகளின் நிர்வாகம் தற்போது இயக்கப்படுகிறது.

அரசசேவையை வினைத்திறகாகவும்,துரிதமாகவும் முன்னெடுக்க புதிய செயற்திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அரச சேவை மாத்திரமல்ல தனியார் சேவைகளை வினைத்திறனாக்க வேண்டுமாயின் சேவைத்துறை கட்டமைப்பில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும்.அரச சேவை கட்டம் கட்டமாக மறுசீரமைக்கப்படும்.அரசசேவை காலத்தின் தேவைக்கமைய மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்கிறோம்.

நாட்டில் 14 இலட்சத்துக்கும் அதிகமான அரச சேவையாளர்கள் உள்ளார்கள். நெருக்கடியான சூழ்நிலையில் அரச சேவையினை மறுசீரமைப்பு எவரும் பாதிக்கப்படாத வகையில் சேவைத்துறையை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். மறுபுறம் 14,022 கிராமசேவகர் பிரிவு ஊடாக வழங்கப்படும் சேவைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும்.

தற்போதைய தரப்படுத்தலுக்கமைய அரச சேவையில் இருந்து ஓய்வுப் பெற்ற 67,5000 பேர் மாத ஓய்வூதிய கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்கிறார்கள்.

பொருளாதார பாதிப்பினால் இவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு தொடர்பில் சிக்கல் எழுந்துள்ளது,இவ்விடயம் தொடர்பில் எதிர்வரும் காலங்களில் தீர்க்கமான தீர்மானம் எடுக்கப்படும்.

நாடு என்ற ரீதியில் மிக நிதி நெருக்கடியை எதிர்க்கொண்டுள்ளது,நிதி நெருக்கடிக்கு தீர்வு கண்டால் எப்பிரச்சினையும் தோற்றம் பெறும்.அரச சேவையில் நிதி செலவுகளை கட்டுப்படுத்த விசேட சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளன. ஒருசில தீர்மானங்கள் சாதகமாக காணப்படுகிறது.

சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறைகளை மேம்படுத்த மாவட்ட அபிவிருத்தி,பிரதேச அபிவிருத்தி குழு தற்போது நியமிக்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண அரச சேவையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாகாணங்களும்,மாவட்டங்களையும் ஒன்றிணைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

மாகாண சபையும்,மாவட்டத்தையும் ஒன்றிணைத்து செயற்படும் போது அரச செலவுகளை இயலுமான அளவு குறைத்துக் கொள்ளலாம்.இருப்பினும் அரச செலவுகளை அதிகரிக்க அனைவரும் நாட்டம் கொள்வதால் அது குறித்து இதுவரை எவரும் அவதானம் செலுத்தவில்லை.

மாகாண சபை தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளமைக்கான காரணத்தை அனைவரும் நன்கு அறிவார்கள்.

மாகாண சபை தேர்தல் முறைமையை திருத்தம் செய்யும் நோக்கில் கடந்த அரசாங்கம் தேர்தல் முறைமையில் சிக்கல் நிலையை தோற்றுவித்துள்ளது.

மாகாண சபை தேர்தல் தொடர்பில் நல்லாட்சி அரசாங்கம் எடுக்கும் தீர்மானம் பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதை ஆரம்பத்தில் இருந்து சுட்டிக்காட்டினோம்.

நல்லாட்சி அரசாங்கத்தில் மாகாண சபைகள் தேர்தல் முறைமை தொடர்பான  பிரேரணையை பாராளுமன்றத்திற்கு கொண்டு வந்த அமைச்சர் எல்லை நிர்ணய அறிக்கைக்கு எதிராக வாக்களித்தார்.

இதுபோன்ற நகைச்சுவையான செயற்பாடு இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் முன்னொரு போதும் பதிவு செய்யப்படவில்லை. மாகாண சபை தேர்தல் முறைமைக்கு ஏற்படுத்திய சிக்கல் நிலைக்கு இதுவரை தீர்வு காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மாகாண சபை தேர்தல் முறையில் உள்ள சட்டசிக்கலுக்கு தீர்வு காண அவதானம் செலுத்தப்பட்டு,ஆரம்பக்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிரச்சினைகளுக்கு தீர்வு காண எதிர்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.உள்ளுராட்சிமன்றங்களின் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகம்,ஆகவே தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் உள்ளுராட்சிமன்றங்களின் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும்.

உள்ளுராட்சிமன்ற தேர்தல் முறைமை தொடர்பில் ஆராய எல்லை நிர்ணய குழு நியமிக்கப்பட்டுள்ளது.தேர்தல் முறைமையில் காணப்படும் பிரச்சினைக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும்.செலவுகளை குறைக்கும் வகையில் தேர்தல் முறைமை மாற்றியமைக்க வேண்டும்.

14 ஆயிரத்துக்கும் அதிகமான கிராம சேவகர் பிரிவு பிறிதொரு சவாலாக காணப்படுகிறது,கிராம சேகவர் பிரிவுகளின் சேவைகளை ஒருமுகப்படுத்துவது குறித்து ஆரம்பக்கட்டப் பேச்சுவார்த்தை  மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரச சேவையில் இருந்து ஓய்வுப் பெறுவதற்கும்,வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்களையும் பெற்றுக் கொள்வதற்கும் தற்போது வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது .

ஊள்ளு உள்ளுராட்சி மன்றங்களை விரிவுப்படுத்தும் நோக்கம் கிடையாது.மன்றங்கள்,சபைகள் விஸ்தரிக்கப்படும் போது அதன் சுமைகளையும் நாட்டு மக்களே எதிர்க்கொள்ள நேரிடும்.ஆகவே ஒருசில பிரதேச சபைகள் ஒன்றிணைக்கப்படும்.

உள்ளுராட்சின்ற சபை குறித்து ஆராய எல்லை நிர்ணய குழு நியமிக்கப்பட்டுள்ளது.தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆலோசனை கோரப்பட்டுள்ளது.

உள்ளுராட்சிமன்ற சபைத் தேர்தல் கடந்த மார்ச் மாதம் பிற்போடப்பட்ட போது எவரும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.தற்போது சிறந்த மாற்றம் நோக்கி செல்லும் போது எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

மாகாண சபை தேர்தல் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.சட்ட சிக்கலுக்கு தீர்வு காணப்பட வேண்டும்.அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தில் 154 ஆவது அத்தியாயத்தின் (டி) பிரிவில் 'மாகாண சபை தேர்தல் நடத்தப்படாத பட்சத்தில் குறித்த மாகாணத்தின் மாவட்ட உறுப்பினர்களை ஒன்றிணைத்து பாராளுமன்ற சபை என்ற அடிப்படையில் குறித்த மாகாணத்தின் பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வு குறித்து ஆராயலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது,மாகாண சபை தேர்தல் இடம் பெற்றதன் பின்னர் இந்த விதிவிதானம் நீக்கப்படும்' எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது,ஆகவே மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இது குறித்து அவதானம் செலுத்தினால் அவ்வாறு செயற்படலாம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44