பிரபல பொலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் படம், பெயர் மற்றும் குரல் ஆகியவற்றை அனுமதியின்றி பயன்படுத்த, புது டெல்லி உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
நடிகர் அமிதாப் பச்சன் சார்பில் அவர் வழக்கறிஞர்கள் ஹரீஷ் சால்வே, பிரவீன் ஆனந்த் ஆகியோர் டெல்லி உயர்நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனுவில், ‘அமிதாப் பச்சன் பெயரைப் பயன்படுத்தி, லாட்டரி சீட்டு நடைபெறுகிறது. போலியாக குரோர்பதி நிகழ்ச்சியை நடத்துகின்றனர். உடைகள், சுவரொட்டிகளில் அவர் புகைப்படங்களைப் பயன்படுத்துகின்றனர்.
‘அமிதாப் பச்சன் வீடியோ கால்’ என்ற போலி மொபைல் ஆப்பும் உருவாக்கப்பட்டுள்ளது. அவர் பெயர், புகைப்படம், குரல் ஆகியவற்றை வணிக நோக்கத்துக்காக பயன்படுத்த தடை விதிக்கவேண்டும் என்று கூறியிருந்தனர்.
விசாரித்த நீதிமன்றம் அமிதாப் பச்சனின் அனுமதியின்றி அவர் பெயர், குரல், புகைப்படங்களைப் பயன்படுத்த தடை விதித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM