கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகமாலை பகுதியில் 29 கிலோ 150 கிராம் கஞ்சாவுடன் இன்றைய தினம் சனிக்கிழமை (நவ 26) இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
யாழில் இருந்து கிளிநொச்சி நோக்கி கப் ரக வாகனத்தில் கஞ்சா ஏற்றி வருவதாக பளை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, முகமாலை பகுதியில் வைத்து 29 கிலோ 150 கிராம் கஞ்சாவுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த அளவிலான கஞ்சா சூட்சுமமான முறையில் கப் ரக வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குலரத்ன தலைமையில் மேற்கொள்ளப்பட்ட தீவிர சோதனையின்போதே கஞ்சா பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் கைதான சந்தேக நபர்கள் இன்று கிளிநொச்சி மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM