யாழில் போதைப்பொருளை கட்டுப்படுத்த கல்வித் திணைக்களத்தின் ஒத்துழைப்பு போதாது - வைத்திய நிபுணர் வினோதா

By Digital Desk 5

26 Nov, 2022 | 10:08 AM
image

யாழில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு கல்வித்திணைக்களம் பூரண ஒத்துழைப்பு வழங்குவதில்லை என சாவகச்சேரி வைத்தியசாலை வைத்திய நிபுணர் அ.வினோதா தெரிவித்தார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற போதைப்பொருள் கட்டுப்படுத்தல் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நீண்ட காலமாக போதைப்பொருள் பாவனை தொடர்பில் பல கூட்டங்கள் இடம் பெறுகின்ற போதிலும் அந்த கூட்டங்களுக்கு கல்வி திணைக்கள அதிகாரிகள் வருவதில்லை. 

அதே போல் பாடசாலைகளில் இருந்து பல முறைப்பாடுகள் கிடைக்கின்றன. ஆனால் அந்த முறைப்பாடுகளுக்குரிய நடவடிக்கைகளை கல்வித் திணைக்களத்தினர் எடுக்கப்படுவதில்லை.

பாடசாலை மட்டங்களில் இடம்பெறும் போதைப்பொருள் செயற்பாடுகளுக்கு கல்வி திணைக்களத்தினர் கட்டாயமாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அதேபோல் வழமையாக மாவட்ட செயலக கூட்டங்களுக்கு கூட அதிகாரிகள் வருவதில்லை. ஆனால் இன்றைய கூட்டத்திற்கு கல்வி திணைக்கள அதிகாரிகள் வந்துள்ளார்கள். அது வரவேற்கக்கப்பட வேண்டிய விடயம்.

குறிப்பாக பாடசாலை மட்டங்களில் போதைப்பொருள் தொடர்பான விடயங்கள் தொடர்பில் கல்வித் திணைக்களம் கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆனால் அந்த கல்வித் துறையினர் நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை. எனவே போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்கு கல்வி அதிகாரிகள் கட்டாயமாக ஒத்துழைப்பு வழங்கினால் மாத்திரமே பாடசாலை மட்டங்களில் உள்ள போதைப்பொருள் விடயங்களை கட்டுப்படுத்த முடியும்.

குறிப்பாக பாடசாலை மட்டங்களில் நடவடிக்கை எடுப்பதற்கு கல்வித்திணைக்களம் தடையாக உள்ளமை தொடர்பிலும் பலமுறைபாடுகள் கிடைக்கப்பட்டுள்ளன. எனவே இது குறித்து கல்வி திணைக்கள உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு...

2023-02-04 18:25:06
news-image

75 வருட சுதந்திர இலங்கையில் நாம்...

2023-02-04 18:31:07
news-image

சவால்களுக்கு நீங்கள் தனித்து முகங்கொடுக்கவில்லை என்பதை...

2023-02-04 18:34:09
news-image

ஒற்றையாட்சி அரசில் அதிகபட்ச அதிகாரப் பகிர்வுக்கான...

2023-02-04 18:52:41
news-image

உயர் பாதுகாப்புக்கு மத்தியில் இடம்பெற்ற சுதந்திர...

2023-02-04 18:28:58
news-image

அம்பாறை காட்டுப்பகுதில் கஞ்சா தோட்டம் முற்றுகை...

2023-02-04 18:27:00
news-image

சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்ளாத...

2023-02-04 14:51:20
news-image

யாழில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர்...

2023-02-04 18:32:12
news-image

யாழில் இடம்பெற்ற 75 ஆவது சுதந்திர...

2023-02-04 18:27:56
news-image

வெளிநாட்டுத் தூதுவர்களுக்கான கண்டி நிகழ்வு குறித்த...

2023-02-04 14:39:02
news-image

சுதந்திர தினத்தில் பல பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம்

2023-02-04 14:36:49
news-image

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இரு உறுப்பினர்கள் இராஜிநாமா

2023-02-04 14:44:53