இன்று நாட்டுக்கு வந்தடைகிறது சீனாவினால் வழங்கப்படும் 9000 மெட்ரிக் தொன் டீசல்

Published By: Digital Desk 5

26 Nov, 2022 | 09:47 AM
image

(எம்.மனோசித்ரா)

விவசாயிகள் மற்றும் மீன்பிடித்துறைக்காக சீன அரசாங்கம் 9000 மெட்ரிக் தொன் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.

இவ்வாறு வழங்கப்படும் டீசலை ஏற்றிய கப்பல் இன்று சனிக்கிழமை (நவ26) கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் என்று கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

'சுப்பர் ஈஸ்டர்ன்' என்ற கப்பல் இன்று சிங்கப்பூரில் இருந்து கொழும்பு துறைமுகத்தை வந்தடைய உள்ளதாக சீனத் தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

நாட்டின் பின்தங்கிய பிரதேசங்களிலுள்ள விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக சீனாவினால் இவ்வாறு 9000 மெட்ரிக் தொன் டீசலை நன்கொடையாக வழங்கும் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இமமாதத்திலும்  டிசம்பரிலும் நாட்டை வந்தடையவுள்ள டீசல் தேவையானவர்களுக்கு விரைவில் விநியோகிக்கப்படும் என்று சீனத் தூதரகம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27