நெதர்லாந்து - ஈக்வடோர் போட்டி சமநிலையில் முடிந்தது

Published By: Sethu

25 Nov, 2022 | 11:48 PM
image

கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் இன்று நடைபெற்ற நெதர்லாந்து, ஈக்வடோர் அணிகளுக்கு இடையிலான போட்டி 1:1 கோல் விகிதத்தில் சமநிலையில் முடிவடைந்தது.

குழு ஏ அணிகளுக்கு இடையிலான இப்போட்டி, கத்தார் தலைநகர் தோஹாவிலுள்ள கலீபா சர்வதேச அரங்கில் நடைபெற்றது.

போட்டியின் 6 ஆவது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் கொடி கெப்கோ கோல் புகுத்தினார். கத்தார் 2022 சுற்றுப்போட்டியில் இதுவரை ஆட்டமொன்று ஆரம்பிக்கப்பட்ட மிக சொற்ப வேளையில் வேகமாக அடிக்கப்பட்ட கோல் இதுவாகும். 

எனினும், பின்னர் ஈக்வடோர் அணி நெதர்லாந்துக்கு கடும் சவாலை ஏற்படுத்தியது. அதன்பின் கூடுதலான நேரம் ஈக்வடோர் அணியை பந்தை தம்வசம் வைத்திருந்தது.

இடைவேளைக்கு சற்று முன் ஈக்வடோர் வீரர் பேர்விஸ் எஸ்துபினன் அடித்த பந்து கோல் கம்பத்தக்குள் புகுந்தது. எனினும், ஈக்வடோர் வீரர்  ஜக்சன் பொரோஸோ ஓவ் சைட்டில் நின்றிருந்ததால் அந்த கோல் அனுமதிக்கப்படவில்லை. 

இடைவேளையின்போது நெதர்லாந்து 1:0 விகிதத்தில் முன்னிலையில் இருந்தது.

எனினும் இடைவேளையின் பின்னர் 49 ஆவது நிமிடத்தில் ஈக்வடோர் வீரர் என்னேர் வலன்சியா கோல் புகுத்தி, கோல் எண்ணிக்கையை சமப்படுத்தினார்.

இச்சுற்றுப்போட்டியில் வலன்சியா புகுத்திய 3 ஆவது கோல் இது என்பது குறிப்பிடத்தக்கது. கத்தார் அணியுடனான போட்டியில் அவர் 2 கோல்களை புகுத்தியிருந்தார்.

இறுதியில் நெதர்லாந்து - ஈக்வடோர் போட்டி 1:1 கோல் விகிதத்தில் சமநிலையில் முடிவடைந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59
news-image

இத்தாலி மெய்வல்லுநர் போட்டியில் யுப்புன் அபேகோனுக்கு...

2024-04-15 16:16:50
news-image

பாரிஸ் 2024 ஒலிம்பிக் டென்னிஸில் பங்குபற்றி...

2024-04-15 13:06:04
news-image

மதீஷவின் பந்துவீச்சில் மண்டியிட்டது மும்பை : ...

2024-04-15 13:24:55
news-image

ரி20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை முன்னோடி...

2024-04-14 22:18:48
news-image

பில் சோல்ட், மிச்செல் ஸ்டாக் பிரகாசிக்க,...

2024-04-14 19:59:07
news-image

வுல்வாட் அபார சதம் : இலங்கையை...

2024-04-14 09:35:43