படப்பிடிப்புக்காக இலங்கைக்கு வருகை தரும் சூர்யா

By Nanthini

25 Nov, 2022 | 06:40 PM
image

டிகர் சூர்யா தற்போது நடித்துவரும் 'சூர்யா 42' எனும் படத்துக்கான படப்பிடிப்புக்காக இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இயக்குநர் சிவா இயக்கத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்துவரும் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கோவா மற்றும் சென்னையில் நடைபெற்றது. 

இதன் அடுத்தகட்ட படப்பிடிப்பு இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக பட குழுவினர் பேசுகையில், 

'கதைப்படி ஆயிரம் ஆண்டுகால முந்தைய வனமும் வனம் சார்ந்த பிரதேசங்களின் பின்னணியில் கதைக்களம் அமைந்திருக்கிறது.

இதற்கான படப்பிடிப்பு தளம் இலங்கையில் தெரிவுசெய்யப்பட்டிருக்கிறது. இதற்காக படக்குழுவினர் 60 நாட்கள் இலங்கையில் தங்கி படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர்' என தெரிவித்தனர்.

சூரியா நடிப்பில் தயாராகிவரும் இந்த திரைப்படம் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராகிறது. 

இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

படக்குழுவினர் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த படத்தில் சூர்யா, ஐந்து வித்தியாசமான தோற்றங்களில் நடிக்கவிருப்பதாகவும், இந்த திரைப்படம் முப்பரிமான கோணத்தில் படமாக்க இருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.

சூர்யா நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக பொலிவுட் இளம் நட்சத்திர தேவதை திஷா படானி நடிக்கிறார். 

சூர்யா நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு, அறுபது நாட்கள் இலங்கையில் நடைபெறுவதால் அவருடைய ரசிகர்கள் உற்சாகம் அடைந்திருக்கிறார்கள்.

இதனிடையே 'சூர்யா 42' திரைப்படம் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 10 மொழிகளில் வெளியாகவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இது சிறுவர்களின் உலகம் - 'தொட்டி...

2023-02-08 11:56:44
news-image

சந்தானத்திற்கு ஜோடியாகும் மேகா ஆகாஷ்

2023-02-07 15:17:58
news-image

யோகி பாபு நடிக்கும் 'லக்கி மேன்'...

2023-02-07 15:17:38
news-image

'தண்ட காரண்யம்' திரைப்படத்தின் டைட்டில் லுக்...

2023-02-07 14:52:23
news-image

அழுது கொண்டே கதை கேட்ட அபர்ணா...

2023-02-07 14:52:41
news-image

வரவேற்பைப் பெற்றிருக்கும் 'கப்ஜா' படத்தின் டைட்டில்...

2023-02-07 14:29:41
news-image

ஜெயிலர்' படத்தில் இணைந்த பொலிவூட் பிரபலம்

2023-02-06 13:48:02
news-image

தனுஷின் 'வாத்தி' திரைப்படத்தின் ஓடியோ வெளியீடு

2023-02-06 13:28:04
news-image

சிம்ஹா நடிக்கும் 'வசந்த முல்லை' படத்தின்...

2023-02-06 13:27:24
news-image

கவின் நடிக்கும் 'டாடா' திரைப்படத்தின் முன்னோட்டம்...

2023-02-06 13:11:13
news-image

தான்யா ரவிச்சந்தினின் 'றெக்கை முளைத்தேன்' படத்தின்...

2023-02-06 13:05:51
news-image

லதா மங்கேஷ்கர் நினைவு தினம்: மணல்...

2023-02-06 12:26:17