நட்சத்திர வாரிசு நடிகரான கௌதம் கார்த்திக்கும், நடிகை மஞ்சிமா மோகனுக்கும் இடையே நவம்பர் மாதம் 28ஆம் திகதியன்று திருமணம் நடைபெறுகிறது.
மணிரத்னம் இயக்கிய 'கடல்' எனும் படத்தின் மூலம் திரையுலகுக்கு கதாநாயகனாக அறிமுகமானவர் நட்சத்திர வாரிசு நடிகரான கௌதம் கார்த்திக்.
கதைகளை நிதானமாக தெரிவுசெய்து நடித்து வரும் இவர், தற்போது 'பத்து தல' மற்றும் '16 ஒகஸ்ட் 1947' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இவருக்கும் 'அச்சம் என்பது மடமையடா' என்ற படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமான மஞ்சிமா மோகன் என்பவருக்கும் காதல் உருவாகி, பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் நடைபெறவிருக்கிறது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் புதுமண தம்பதிகள் பேசியதாவது,
''முதலில் நான் தான் மஞ்சிமாவிடம் என்னுடைய காதலை முன்மொழிந்தேன். நான் அவளிடம் மட்டுமே காதலை முன்மொழிந்தேன்.
மஞ்சிமா இரண்டு நாட்கள் அவகாசம் எடுத்துக்கொண்டார். அந்த இரண்டு நாட்களிலும் சற்று பதற்றமும் பயமும் இருந்தது. ஆனால், அவள் சம்மதம் தெரிவித்த பிறகு மகிழ்ச்சியானேன்.
'தேவராட்டம்' எனும் திரைப்படத்தில் பணியாற்றியபோது அறிமுகமாகி, நல்ல நண்பர்களானோம். அதன் பிறகு தான் அவரை காதலிக்க தொடங்கினேன். ரகசியமாக வைத்திருந்த எங்களது உறவை சமூக வலைத்தளங்களின் மூலம் பகிரங்கப்படுத்திய பிறகு ஏராளமானவர்கள் எங்களை வாழ்த்தினார். அவர்களது வாழ்த்து எங்களை திருமண பந்தத்தில் இணைத்திருக்கிறது'' என்றனர்.
இந்த ஆண்டில் திருமணம் செய்துகொள்ளும் நட்சத்திர தம்பதிகளின் பட்டியலில் லேட்டஸ்டாக இணைந்திருக்கும் கௌதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் தம்பதிக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM