2022 உலகக் கிண்ணத்தில் முதல் சிவப்பு அட்டை: வேல்ஸை வென்றது ஈரான்

By Sethu

25 Nov, 2022 | 06:14 PM
image

கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் வேல்ஸ் அணியை 2:0 கோல்களால் ஈரான் அணி வென்றது.

குழு பி இலுள்ள அணிகளுக்கு இடையிலான இப்போடடி கத்தாரின் அல் ரையான் நகரிலுள்ள அஹ்மத் பின் அலி அரங்கில்  நடைபெற்றது. 

இப்போட்டியில் இடைவேளை வரை எந்தவொரு அணியும் கோல் புகுத்தவில்லை. 

முதல் சிவப்பு அட்டை

இப்போட்டியின் 86 ஆவது நிமிடத்தில் வேல்ஸ் வெய்ன் ஹென்னஸி சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். 

கத்தார் 2022 உலகக் கிண்ண சுற்றுப்போட்டியில் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட முதல் வீரர் இவராவார். 

வெய்ன் ஹென்னஸி வெளியேறியதால் 10 பேருடன் விளையாடும் நிலைக்கு வேல்ஸ் அணி தள்ளப்பட்டது. டெனி வர்ரட் அவ்வணியின் புதிய கோல் காப்பாளராக பணியாற்றினர். 

அதன் பின்னர்  ஈரானிய 2 கோல்களை அடித்தது.

உபாதை ஈடு நேரத்தின் 8  ஆவது நிமிடத்தில் ஈரானின் ரூபே செஸ்மி முதலாவது கோலைப் புகுத்தினார். மேலும் 3 நிமிடங்கள் கடந்த நிலையில், ஈரானின் ரமின் ரெஸாயன் 2 ஆவது கோலை புகுத்தினார்.

குழு பி இல் ஈரானிய அணி தற்போது இங்கிலாந்துக்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தில் உள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜேர்மனி - ஸ்பெய்ன் வெற்றிதோல்வியின்றி முடிவு...

2022-11-28 09:24:21
news-image

சர்வதேச கராத்தே நடுவர் பயிற்சி பாசறை 

2022-11-28 09:40:51
news-image

கனடா வீரர் டேவிஸ் வேகமான கோலை...

2022-11-28 06:28:47
news-image

பெல்ஜியத்துக்கு  அதிர்ச்சியளித்தது மொரோக்கோ

2022-11-27 20:53:18
news-image

கிரிக்கெட் விளையாட்டில் தமிழ், முஸ்லிம் வீரர்களுக்கு...

2022-11-27 18:29:00
news-image

ஸ்பெய்னிடம் ஜேர்மனிக்கு கடும் சவால் காத்திருக்கிறது...

2022-11-27 14:42:42
news-image

ரசிகர்களின் கோஷங்கள் தொடர்பாக  ஈக்வடோர், மெக்ஸிக்கோ...

2022-11-27 20:55:12
news-image

ஆப்கானுடனான தோல்வி இலங்கையின் உலகக் கிண்ண...

2022-11-27 12:03:29
news-image

மெக்ஸிகோவை வென்ற ஆர்ஜன்டீனாவின் 2ஆம் சுற்றுக்கான...

2022-11-27 09:16:15
news-image

எம்பாப்பேயின் 2 கோல்களின் உதவியுடன் டென்மார்க்கை...

2022-11-27 07:15:26
news-image

ஆர்ஜன்டீனாவின் தலைவிதியைத் தீர்மானிக்கும் போட்டியுடன் மேலும்...

2022-11-26 13:41:40
news-image

வரவேற்பு நாடான கத்தார் உலகக் கிண்ண...

2022-11-26 13:07:52