'காரி' திரை விமர்சனம்

By Nanthini

25 Nov, 2022 | 06:53 PM
image

தயாரிப்பு: பிரின்ஸ் பிக்சர்ஸ்

நடிகர்கள்: சசிகுமார், பார்வதி அருண், ஜேடி சக்கரவர்த்தி, ஆடுகளம் நரேன், நாகி நீடு, பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர்

இயக்கம்: ஹேமந்த்

மதிப்பீடு: 3/5

க மனிதர்கள் இடையேயான அன்பு பகிர்தலை மனிதர்களுடன் இயற்கை முறையிலான சுழற்சியில் இருக்கும் விலங்குகள் மீதும் நீட்டிக்கப்பட வேண்டும் என்பதனை வலிமையுடன் உணர்த்தியிருக்கும் கதை தான் 'காரி'. 

தமிழர்களின் வீரம் செறிந்த பாரம்பரிய கலாசார விளையாட்டான ஏறு தழுவுதல் எனும் ஜல்லிக்கட்டு என போற்றப்படும் விளையாட்டு, மனிதர்களுக்கும் விலங்குகளான காளை மாடுகளுக்கும் இடையேயான உணர்வு ரீதியிலான உறவின் அடையாளம் என்பதை அடர்த்தியான திரைக்கதையின் மூலம் உணர்த்தியிருக்கும் திரைப்படம் தான் 'காரி'.

கதாநாயகனான சசிகுமார் சென்னையில் பந்தயக் குதிரைகளை லாவகமாக ஓட்டும் வீரராக பணியாற்றுகிறார். இவருடன் ஜீவகாருண்யம் பேசும் தந்தையாக ஆடுகளம் நரேன் வசிக்கிறார். 

தன் மகனை நினைத்து பெருமிதம் கொள்ளும் நரேன், காளை, குதிரை மீது அளவற்ற பாசம்  கொண்டிருக்கிறார். தன்னைப் போலவே தனது வாரிசான சசிகுமாரும், மிருகங்கள் மீது அளவற்ற அன்பினை கொண்டிருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார். 

ஆனால், சசிகுமார், பந்தய குதிரைகளை விட, சக மனிதர்களுக்கு முக்கியத்துவமும் முன்னுரிமையும் கொடுக்கிறார். இதனால் அவர் தந்தையை இழக்கிறார். இது அவருக்குள் பாரிய மன பாதிப்பை ஏற்படுத்துகிறது. 

இந்த தருணத்தில் சசிக்குமாரின் பூர்வீக கிராமத்திலிருந்து அவருடைய தந்தையின் உறவினர்கள், கிராமத்தில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினையை தீர்த்து வைக்குமாறு உதவி கேட்கிறார்கள். முதலில் மறுக்கும் சசிகுமார், தந்தையின் இழப்புக்கு பின் கிராமத்துக்கு செல்கிறார். 

அங்கு அவர் எதிர்கொள்ளும் பிரச்சினை என்ன? அதற்கான தீர்வினை அவரால் வழங்க முடிந்ததா? இதுவே 'காரி' படத்தின் திரைக்கதை.

சசிகுமார் நன்றாக நடித்திருக்கிறார். அவருடன் வரும் ரெடின் கிங்ஸிலி பேசும் சில வசனங்கள், சிறிய அளவிலான புன்னகையை வரவழைக்கிறது. 

நாயகியாக நடித்திருக்கும் புதுமுக நடிகை பார்வதி அருண், தான் பாசத்துடன் வளர்க்கும் ஜல்லிக்கட்டு காளையை அவருடைய தந்தை விற்றவுடன், அதை காணாது தவிக்கும் காட்சி, பார்வையாளர்களின் கண்களில் இருந்து கண்ணீரை வரவழைக்கிறது. அந்த காட்சியில் பார்வதி அருணின் நடிப்பு பிரமாதம்.

ஜல்லிக்கட்டு காளை குறித்த சர்வதேச வணிகமும், அதன் பின்னணியில் இயங்கும் வணிக நிறுவனங்கள் குறித்தும் இயக்குநர் விளக்கியிருப்பது சபாஷ். அதே தருணத்தில் ஒரு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு அரசாங்கத்தின் சார்பாக முன்வைக்கப்படும் விடயங்களும் அதன் பின்னணியையும் தெரிவித்திருப்பது கவனம் பெறுகிறது.

ஒளிப்பதிவு, பின்னணியிசை இந்த இரண்டும் இயக்குநருக்கு பலமாக இருக்கின்றன. 

அறிமுக இயக்குநர் ஹேமந்த், தமிழக நகரான ராமநாதபுர மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளின் இயல்பையும், அங்கு எம்மாதிரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால், அப்பகுதி மேம்பாடு அடையும் என்பதையும் விவரித்திருப்பது பாராட்டுக்குரியது.

நாயகன் சசிகுமார் 18 வகையான ஜல்லிக்கட்டு காளைகளில் ஒன்றை கூட அடக்காமல் சாமர்த்தியமாக காட்சிப்படுத்தி இருப்பது பார்வையாளர்களை அதிருப்திக்கு ஆளாக்கி இருக்கிறது. 

ஜல்லிக்கட்டு காளைகளில் அபூர்வமான காளையாக கருதப்படும் பரிபூரண கறுப்பு நிறம் கொண்ட 'காரி' எனும் காளையை மட்டும் சசிகுமார் அடக்குவது போல்  காட்சிப்படுத்தியிருப்பது பார்வையாளர்களிடையே நகைப்பை உண்டாக்குகிறது. இதனை இயக்குநர் கவனமாக கையாண்டிருக்கலாம்.

காரி - ஜல்லிக்கட்டு கம்பீரம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இது சிறுவர்களின் உலகம் - 'தொட்டி...

2023-02-08 11:56:44
news-image

சந்தானத்திற்கு ஜோடியாகும் மேகா ஆகாஷ்

2023-02-07 15:17:58
news-image

யோகி பாபு நடிக்கும் 'லக்கி மேன்'...

2023-02-07 15:17:38
news-image

'தண்ட காரண்யம்' திரைப்படத்தின் டைட்டில் லுக்...

2023-02-07 14:52:23
news-image

அழுது கொண்டே கதை கேட்ட அபர்ணா...

2023-02-07 14:52:41
news-image

வரவேற்பைப் பெற்றிருக்கும் 'கப்ஜா' படத்தின் டைட்டில்...

2023-02-07 14:29:41
news-image

ஜெயிலர்' படத்தில் இணைந்த பொலிவூட் பிரபலம்

2023-02-06 13:48:02
news-image

தனுஷின் 'வாத்தி' திரைப்படத்தின் ஓடியோ வெளியீடு

2023-02-06 13:28:04
news-image

சிம்ஹா நடிக்கும் 'வசந்த முல்லை' படத்தின்...

2023-02-06 13:27:24
news-image

கவின் நடிக்கும் 'டாடா' திரைப்படத்தின் முன்னோட்டம்...

2023-02-06 13:11:13
news-image

தான்யா ரவிச்சந்தினின் 'றெக்கை முளைத்தேன்' படத்தின்...

2023-02-06 13:05:51
news-image

லதா மங்கேஷ்கர் நினைவு தினம்: மணல்...

2023-02-06 12:26:17