என் கணவர் பாலியல் வெறி பிடித்தவர் : சோனியா காந்தியிடம் காங்கிரஸ் எம்எல்ஏவின் மனைவி முறைப்பாடு

Published By: Sethu

25 Nov, 2022 | 04:38 PM
image

இந்தியாவின் மத்திய பிரதேச மாநில சட்டமன்ற உறுப்பினரான தனது கணவர் உமங் சிங்கருக்கு பெண்களை மறைந்திருந்து வீடியோ எடுத்து, அவர்களை அச்சுறுத்தும் செய்யும் கொடூர பாலியல் பழக்கம் உள்ளதாக அவரின் மனைவி தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உமங் சிங்கர், மத்திய பிரதேச சட்டமன்ற உறுப்பினராக (எம்.எல்.ஏ.) எதவி வகிக்கிறார். உமங் சிங்கர் மீது அவரின் மனைவி பொலிஸிலும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளார். இது தொடர்பில் பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

அத்துடன் உமங் சிங்கர் தொடர்பில் மனைவி முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சித் தலைவர் கமல் நாத் உள்ளிட்டோருக்கு கடிதமும் எழுதியுள்ளார். தனக்கு நீதி கிடைக்க உதவ வேண்டும் என்று இக்கடிதத்தை எழுதியுள்ளார். 

அக்கடிதத்தில், தனது கணவருக்கு பெண்களை மறைந்திருந்து வீடியோ எடுத்து, அவர்களை அச்சுறுத்துமு;  செய்யும் கொடூர பாலியல் பழக்கம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

'உமங் சிங்கரால் நான் பலமுறை அநீதி இழைக்கப்பட்டேன். ஆனால், இந்த முறை அவர் எல்லா வரம்புகளையும் தாண்டிவிட்டார், இனி என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது. நீங்கள் கட்சித் தலைவராக இருப்பதாலும், பெண்களுக்கு எப்போதும் ஆதரவாக இருப்பதாலும், உங்களுக்குத் தெரிவிக்க வேண்டியது அவசியம். எனக்கு நீதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன். 

பெண்களை மறைமுகமாக வீடியோ எடுப்பதில் அவருக்கு ஒரு வகை பாலியல் பழக்கம் உள்ளது. அவர் தனது முன்னாள் மனைவியை எப்போதும் வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகளை எடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். அதையே என்னிடமும் செய்தார். இப்போது அந்த வீடியோக்களை பயன்படுத்தி என்னை மிரட்டி வருகிறார். 

அவருக்கு பல குணாதிசயங்கள் உள்ளன. அவர் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு மாதிரியாக நடந்துகொள்கிறார். அவருக்கு எதிராக பலமுறை புகார் கொடுத்துள்ளேன். ஆனால், உள்ளூர் பொலிஸார் முறைப்பாட்டை விசாரணைக்கு எடுக்கவில்லை. இது எனது தனிப்பட்ட விஷயம் என்பதால் இந்த தகவல் எதுவும் பொதுவில் வருவதை நான் விரும்பவில்லை, ஆனால் எனக்கு வேறு வழி தெரியவில்லை. இறுதியாக எனது கணவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நாங்கள் இருவரும் காங்கிரஸில் இருப்பதால், என்பதால் இதை உங்களுக்குத் தெரிவிக்க விரும்பினேன்' என உமங் சிங்கரின் தெரிவித்துள்ளார்.  

இந்த விவாகரம் குறித்து மத்திய பிரதேச மாநில பாஜகவும் காங்கிரஸை கடுமையாக சாடியுள்ளது. இந்த விவகாரம் குறித்து பேசிய மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், 'காங்கிரஸ் கட்சியினர் தங்கள் தலைவரை தண்டிக்காமல், அரசியலாக பார்ப்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. இந்த விவகாரத்தில் பாஜகவுக்கு எந்த தொடர்பும் இல்லை என்பதை நான் தெளிவுபடுத்துகிறேன். சட்டம் தன் வேலையைச் செய்யும். மத்தியப் பிரதேசத்தில் பெண்களுக்குத் தொல்லை கொடுப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள்' எனக் கூறியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52