லெதம், வில்லியம்சன் இணைப்பாட்ட உதவியுடன் இந்தியாவை 7 விக்கெட்களால் வென்றது நியூஸிலாந்து

By Digital Desk 5

25 Nov, 2022 | 03:39 PM
image

(என்.வீ.ஏ.)

இந்தியாவுக்கும் நியூஸிலாந்துக்கும் இடையில் ஆக்லண்ட், ஈடன் பார்க் விளையாட்டரங்கில் இன்று (25)  நடைபெற்ற முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்களால் நியூஸிலாந்து அமோக வெற்றிபெற்றது.

டொம் லெதம் குவித்த அபார சதமும் கேன் வில்லியம்சன் பெற்ற அரைச் சதமும் நியூஸிலாந்தை வெற்றி அடையச் செய்தன.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 306 ஓட்டங்களைக் குவித்தது.

Shreyas Iyer applauds as Tom Latham soaks it in, New Zealand vs India, 1st men's ODI, Auckland, November 25, 2022

ஷிக்கர் தவான் (13 பவுண்டறிகளுடன் 72 ஓட்டங்கள்), ஷுப்மான் கில் (3 சிக்ஸ்கள், ஒரு பவுண்டறியுடன் 50 ஓட்டங்கள்) ஆகிய இருவரும் முதலாவது விக்கெட்டில் 124 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவுக்கு சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

ஆனால் இருவரும் அதே மொத்த எண்க்கையில் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து ரிஷாப் பன்ட் (15), சூரியகுமார் யாதவ் (4) ஆகிய இருவரும் குறைந்த எண்ணிக்கைகளுடன் களம் விட்டகன்றனர்.

Shreyas Iyer played all his shots in a 76-ball 80, New Zealand vs India, 1st men's ODI, Auckland, November 25, 2022

எனினும் ஷ்ரேயாஸ் ஐயரும் சஞ்சு செம்சனும் 5ஆவது விக்கெட்டில் 94 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர்.

ஐயர் 4 சிக்ஸ்கள்,  4 பவுண்டறிகள் அடங்கலாக 80 ஓட்டங்களையும் சஞ்சு செம்சன் 36 ஓட்டங்களையும் பெற்றனர். வொஷிங்டன் சுந்தர் 37 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

நியூஸிலாந்து பந்துவீச்சில் லொக்கி பேர்குசன் 59 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் டிம் சௌதீ 73 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

307 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 47.1 ஓவர்களில் 3 விக்கெடக்ளை இழந்து 309 ஓட்டங்களைப் பெற்று மிக இலகுவாக வெற்றியீட்டியது.

நியூஸிலாந்தின் ஆரம்பம் சிறப்பாக அமையாதபோதிலும் கேன் வில்லியம்சனும் டொம் லெதமும் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 221 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றியை உறுதி செய்தனர்.

Shardul Thakur doesn't look happy as the game runs away from India, New Zealand vs India, 1st men's ODI, Auckland, November 25, 2022

நியூஸிலாந்து துடுப்பாட்டத்தில் டொம் லெதம் 19 பவுண்டறிகள், 5 சிக்ஸ்கள் உட்பட 145 ஓட்டங்களுடனும் கேன் வில்லியம்சன் ? பவுண்டறிகள், 7 சிக்ஸ்கள், ஒரு பவுண்டறி உட்பட 94 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பின் அலன் (22), டெவன் கொன்வே (24), டெரில் மிச்செல் (11) ஆகிய மூவரும் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

இந்திய பந்துவீச்சில் உம்ரன் மாலிக் 66 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

Tom Latham looked mostly untroubled as he got to a 51-ball half-century, New Zealand vs India, 1st men's ODI, Auckland, November 25, 2022

ஆட்டநாயகன்: டொம் லெதம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரேஸில் - குரோஷியா போட்டியுடன் உலகக்...

2022-12-09 10:18:00
news-image

கலம்போ ஸ்டார்ஸுக்கு முதலாவது வெற்றி :...

2022-12-09 07:40:15
news-image

ஸ்பெய்ன் கால்பந்து அணியின் பயிற்றுநர் நீக்கப்பட்டார்:...

2022-12-08 18:28:45
news-image

தொடர்ச்சியாக 3 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் சதம்...

2022-12-08 17:43:11
news-image

ரசிகர்களின் கோஷங்களால் குரோஷியாவுக்கு பீபா 1.94...

2022-12-08 16:12:46
news-image

வரலாறு படைத்தது வத்தளை லைசியம்; நந்துன்,...

2022-12-08 16:14:19
news-image

நான்கு பற்களை இழந்தார் சாமிக நேற்றைய...

2022-12-08 10:46:41
news-image

க்ளடியேட்டர்ஸ் அணியின் வெற்றிக்கு வழிவகுத்த ப்றத்வெய்ட்,...

2022-12-08 10:09:41
news-image

மெஹிதி ஹசன் மிராசின் சகலதுறை ஆட்டத்தால்...

2022-12-07 21:48:33
news-image

தீக்ஷன, வியாஸ்காந்த், சதீர, அவிஷ்க அபாரம்...

2022-12-07 21:42:13
news-image

நியூ ஸிலாந்து றக்பி தலைவராக முதல்...

2022-12-07 13:11:52
news-image

ரமொஸின் ஹெட்-ரிக் கோல்களின் உதவியுடன் கால்...

2022-12-07 10:24:18