பாடகர் கிறிஸ் வூவுக்கு பாலியல் வல்லுறவு வழக்கில் 13 வருட சிறை

By Sethu

25 Nov, 2022 | 03:40 PM
image

சீன - கனேடிய பொப்பிசைப் பாடகரும் நடிகருமான கிறஸ் வூவுக்கு, பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் சீன நீதிமன்றம் 13 வருட சிறைத்தண்னை விதித்து இன்று தீர்ப்பளித்துள்ளது.

35 வயதான கிறிஸ் வூ, சீனாவில் பிறந்தவர். அவரின் உண்மையான பெயர் வூ யீ பான். 

ஆரம்பத்தில் கொரிய பொப்பிசைக் குழுவான EXO இல் அங்கம் வகித்ததன் மூலம் அவர் புகழ்பெற்றார். 2014 ஆம் ஆண்டு அக்குழுவிலிருந்து விலகி, தனியாக பாடகராகவும் நடிகராகவும் மொடலாகவும் புகழ்பெற்றார். 2017 ஆம் ஆண்டு வெளியான  XXX: Return of Xander Cage  திரைப்படத்தின் மூலம் ஹொலிவூட் நடிகராகவும் அவர் அறிமுகமானார்.

பின்னர் அவர் கனேடிய பிரஜாவுரிமையைப் பெற்றார்.

தான் 17 வயது சிறுமியாக இருந்தபோது, கிறிஸ் வூ தன்னை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தினார் என  கடந்த வருடம் 19 வயது மாணவி ஒருவ்ர குற்றம் சுமத்தினார்.  

இவ்விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல அனுசரணை நிறுவனங்கள் அவருடனான ஒப்பந்தங்களை கைவிட்டன. 

இக்குற்றச்சாட்டையடுத்து சீனாவில் #MeToo (#மீடூ  ) பிரச்சாரங்கள் தீவிரமடைந்தன. 

பாலியல் குற்றசாட்டு தொடர்பில் கிறிஸ் வூவை பெய்ஜிங் பொலிஸார் கடந்த வருடம் ஜூலை மாதம் கைது செய்தனர்.

கிறிஸ் வூ மீதான பாலியல் குற்றச்சாட்டுகளுக்காக அவருக்கு 13 வருட சிறைத்தண்டனை விதித்து, பெய்ஜிங்கின் சாவோயாங்கிலுள்ள நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

சிறைத்தண்டனைக் காலம் முடிந்தவுடன் அவர் நாடு கடத்தப்படுவார் எனவும் நீதிமன்றம் தெரிவித்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரிட்டன், இத்தாலி, ஜப்பான் இணைந்து நவீன...

2022-12-09 15:40:44
news-image

ஈரானில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் பெண்களின் முகங்களையும்...

2022-12-09 15:34:50
news-image

புர்கா அணிந்து நடனமாடிய 4 ஆண்...

2022-12-09 13:22:54
news-image

சீனாவில் மாணவர்கள் போராட்டம்

2022-12-09 13:27:25
news-image

ரஷ்ய வணிக வளாகத்தில் கால்பந்து மைதானம்...

2022-12-09 12:30:43
news-image

'அவசியமான காரணங்களுக்காக மட்டுமே பயணம் மேற்கொள்ளுங்கள்'...

2022-12-09 13:19:06
news-image

இலங்கை இனப்படுகொலை: இந்தியா வாக்களிக்காததன் காரணம்...

2022-12-09 12:09:58
news-image

ஐரோப்பிய எல்லைகளில் குடியேற்றவாசிகள் முன்னர் ஒருபோதும்...

2022-12-09 11:56:20
news-image

ஒரு பாலினத் திருமணங்களைப் பாதுகாக்கும் சட்டமூலம்...

2022-12-09 11:49:09
news-image

இந்தியாவில் திருமண நிகழ்வில் எரிவாயு சிலிண்டர்கள்...

2022-12-09 11:17:28
news-image

அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீராங்கனை பிரிட்னியும் ரஷ்ய...

2022-12-09 10:53:10
news-image

ரயில் நிலைய மேடைக்கும் ரயிலுக்கும் இடையில்...

2022-12-08 22:18:00