உலகக் கிண்ண இரண்டாம் சுற்றை குறிவைத்துள்ள இங்கிலாந்து, நெதர்லாந்து

By Digital Desk 5

25 Nov, 2022 | 03:11 PM
image

(நெவில் அன்தனி)

கத்தாரில் நடைபெற்றுவரும் 22ஆவது உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் முதல் சுற்றின் முதலாம் கட்டப் போட்டிகள் வியாழக்கிழமை (24) பூர்த்தியான நிலையில் இன்றிலிருந்து அடுத்த நான்கு தினங்களுக்கு 2ஆம் கட்டப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

இங்கிலாந்தும் நெதர்லாந்தும் 16 அணிகள் கொண்ட நொக் அவுட் சுற்றுக்கு தகுதிபெறுவதை உறுதி செய்யும் நோக்கத்துடன் இன்று தத்தமது இரண்டாவது போட்டிகளில் விளையாடவுள்ளன.

பி குழுவில் இடம்பெறும் இங்கிலாந்து இன்றைய தினம் ஐக்கிய அமெரிக்காவை எதிர்த்தாடவுள்ளது. இப் போட்டி அல் பெய்த் விளையாட்டரங்கில் இன்று வெள்ளிக்கிழமை (25) நள்ளிரவுக்குப் பின்னர் 12.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

தனது முதலாவது போட்டியில் ஈரானை 6 - 2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் துவம்சம் செய்த ஹெரி கேன் தலைமையிலான இங்கிலாந்து, இன்றைய போட்டியிலும் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, வேல்ஸுடனான தனது முதலாவது போட்டியை வெற்றிதோல்வியன்றி முடித்துக்கொண்ட ஐக்கிய அமெரிக்கா, இன்றைய போட்டியில் இங்கிலாந்தை வெற்றிகொள்ளும் என எதிர்பார்க்க முடியாது.

நெதர்லாந்து எதிர் ஈக்வடோர்

ஏ குழுவில் தத்தமது முதலாம் கட்டப் போட்டிகளில் வெற்றிபெற்ற நெதர்லாந்தும் ஈக்வடோரும் கலிபா விளையாட்டரங்கில் இன்று இரவு 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள போட்டியில் மோதவுள்ளன.

இக் குழுவுக்கான தத்தமது ஆரம்பப் போட்டியில் செனகலை நெதர்லாந்தும் கத்தாரை ஈக்வடோரும் 2 - 0 என்ற ஒரே எண்ணிக்கையிலான கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிகொண்டிருந்தன.

இந்த இரண்டு அணிகளுக்கு இடையிலான போட்டியில் வெற்றிபெறும் அணி பெரும்பாலும் அடுத்து சுற்றில் விளையாட தகுதிபெறும். ஆகையால் இரண்டு அணிகளும் ஒன்றையொன்று வெற்றிகொள்ள கடுமையாக முயற்சிக்கும்.

இந்த இரண்டு அணிகளில் நெதர்லாந்து வெற்றிபெறுவதற்கு அனுகூலமான அணியாக தென்படுகின்றபோதிலும் ஈக்வடோர் இப் போட்டியை இலகுவில் நழுவ விடப்போவதில்லை. எனவே இப் போட்டி கடைசிவரை விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கலாம்.

கத்தார் எதிர் செனகல்

ஏ குழுவுக்கான தத்தமது ஆரம்பப் போட்டிகளில் தோல்வி அடைந்த கத்தாரும் செனகலும் அல் துமாமா விளையாட்டரங்கில் இன்று மாலை 6.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இரண்டாம் கட்டப் போட்டியில் விளையாடவுள்ளன.

வரவேற்பு நாடான கத்தார் தனது நாட்டு இரசிகர்களைத் திருப்திபடுத்தும் நோக்கில் இன்றைய போட்டியில் வெற்றிபெற முயற்சிக்கும் என்பது உறுதி. ஆனால், இந்தப் போட்டி கத்தாருக்கு இலகுவாக அமையப் போவதில்லை.

உலக கால்பந்தாட்ட தரவரிசையில் கத்தார் 50ஆவது இடத்தில் இருக்கும் அதேவேளை, செனகல் 32 இடங்கள்   முன்னிலையில் 18ஆவது இடத்தில் இருக்கிறது.

எவ்வாறாயினும் உலக தரவரிசைகளுக்கும் போட்டி முடிவுகளுக்கும் சம்பந்தம் இல்லை என்பதை சவூதி அரேபியாவிடம் ஆர்ஜன்டீனாவும் ஜப்பானிடம் ஜேர்மனியும் அடைந்த எதிர்பாராத தோல்விகள் மூலம் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

எனவே செனகலை கத்தார் வெற்றிகொண்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

வேல்ஸ் எதிர் ஈரான்

பி குழுவில் இடம்பெறும் வேல்ஸுக்கும் ஈரானுக்கும் இடையிலான இரண்டாம் கட்டப் போட்டி அஹ்மத் பின் அலி விளையாட்டரங்கில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

ஐக்கிய அமெரிக்காவுடனான தனது ஆரம்பப் போட்டியை வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்ட வேல்ஸ், முதலாவது வெற்றியைக் குறிவைத்து ஈரானை எதிர்த்தாடவுள்ளது.

ஈரான் தனது ஆரம்பப் போட்டியில் இங்கிலாந்திடம் படுதோல்வி அடைந்திருந்தது.

உலக தரவரிசையில் வேல்ஸ், ஈரான் ஆகிய இரண்டு நாடுகளும் முறையே 18ஆம், 19ஆம் இடங்களில் இருப்பதால் இன்றைய போட்டி கடைசிவரை விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரேஸிலை வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதிபெற்றது...

2022-12-09 23:48:32
news-image

2 ஆவது காலிறுதியில் ஆர்ஜன்டீனா -...

2022-12-09 21:30:59
news-image

அறிமுகப்போட்டியில் ஏழு விக்கெட்களை வீழ்த்தி பாக்கிஸ்தானின்...

2022-12-09 16:39:20
news-image

7 விக்கெட் இழப்புக்கு 511 ஓட்டங்களுடன்...

2022-12-09 17:36:09
news-image

பிரேஸில் - குரோஷியா போட்டியுடன் உலகக்...

2022-12-09 10:18:00
news-image

கலம்போ ஸ்டார்ஸுக்கு முதலாவது வெற்றி :...

2022-12-09 07:40:15
news-image

ஸ்பெய்ன் கால்பந்து அணியின் பயிற்றுநர் நீக்கப்பட்டார்:...

2022-12-08 18:28:45
news-image

தொடர்ச்சியாக 3 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் சதம்...

2022-12-08 17:43:11
news-image

ரசிகர்களின் கோஷங்களால் குரோஷியாவுக்கு பீபா 1.94...

2022-12-08 16:12:46
news-image

வரலாறு படைத்தது வத்தளை லைசியம்; நந்துன்,...

2022-12-08 16:14:19
news-image

நான்கு பற்களை இழந்தார் சாமிக நேற்றைய...

2022-12-08 10:46:41
news-image

க்ளடியேட்டர்ஸ் அணியின் வெற்றிக்கு வழிவகுத்த ப்றத்வெய்ட்,...

2022-12-08 10:09:41